இடுகைகள்

ராஷ்மிகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!

படம்
  சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.  ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.  க

தந்தையின் களங்கத்தைப் போக்க தன் வாழ்வையே தியாகம் செய்யும் ரா ஏஜெண்ட் - மிஷன் மஜ்னு - சித்தார்த், ராஷ்மிகா

படம்
  மிஷன் மஜ்னு இந்தி சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய் காலகட்டத்தில் நடைபெறும் தேசப்பற்றுப் படம். கதை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. அங்கு வாழும் தாரிக் என்ற டெய்லர், ஐந்து வேளை தொழும் இறைபக்தியாளர். அவர் வேலைக்காக தொழுகைக்கு வரும் மௌல்வியிடம் சிபாரிசு கேட்கிறார். சொன்னபடியே தன் திறமையைக் காட்டி டெய்லர் கடையில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறார். அப்போதுதான் நஸ் ரீன் என்ற பார்வைத்திறன்ற்ற பெண்ணைப் பார்க்கிறார். காதலில் விழுகிறார். முஸ்லீமாக இருந்தாலும் அதிக பணவரவு இல்லாத டெய்லர் என்பதால் காதலுக்கு நஸ் ரீனின் அப்பா சம்மதிக்கவில்லை. ஆனாலும் அவரை வேலைக்கு வைத்துள்ள முதலாளியும், நஸ் ரீனின் அப்பாவும் நெருங்கிய மாமா, மச்சான் உறவு என்பதால் பொருமலுடன் சம்மதிக்கிறார் அபு. இந்த நிலையில் தாரிக்கிற்கு இந்தியாவில் இருந்து வேலை ஒன்று வருகிறது. பாகிஸ்தான் அணு ஆயுத திட்டம் ஒன்றை செய்யவிருப்பதாகவும். அதை தடுத்து நிறுத்த   தேவையான ஆதாரங்களைக் கொண்டு வர சொல்லுகிறார்கள். இந்த வேலையை ரா ஏஜெண்டாக தாரிக் செய்தாரா இல்லையா என்பதே கதை. படத்தில் உருப்படியான விஷயம், தாரிக் – நஸ்

அதிர வைக்கும் ரொமான்ஸ் காமெடி - பீஷ்மா படம் எப்படி?

படம்
பீஷ்மா  - தெலுங்கு இயக்கம்  வெங்கி குடுமுலா இசை மகதி சாகர் ஒளிப்பதிவு  ஆஹா... சலோ என்ற நாக சௌரியா படம் பார்த்திருப்பீர்கள் என்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம். சீரியசான கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் சிதறும்படி எந்த ஆபத்தும் நடந்துவிடாத கதை. நிதின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பின்னியிருக்கிறார். வாட் எ பியூட்டி பாட்டில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். நடித்திருக்கிறார். காமெடி செய்திருக்கிறார். இவருக்கு இணையாக படத்தில் நாயகிக்கான இடத்தையும் ராஷ்மிகா செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. நிதினின் அப்பாவாக வரும் நரேஷ், மாமாவான பிரம்மாஜி காம்போ ரசிக்க வைக்கிறது. ஐயையோ படத்தில் ஆபத்தான சீரியசான எந்த விஷயமும் நடக்கவில்லை. நாயகனுக்கு ஒரே பிரச்னை. வேலை கிடையாது. காதலி கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நாம் கவலைப்பட்டு படத்தில் என்ன மாறப்போகிறது, எனவே படத்தை காவிரி ஆறு போல அதன் போக்கிலே போகட்டும் என விட்டுவிடுகிறோம்.  ஃபீல்டு சயின்ஸ் கம்பெனி இயக்குநரும் வீக்கான வில்லன் என்பதால் எதிர்பார்க்க ஏதுமில்லை. மகதியின் பின்னணி இசை, பாடல்க