இடுகைகள்

சமரசிம்ஹா ரெட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி

படம்
  சமரசிம்ஹா ரெட்டி பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி இயக்கம் - ஜி கோபால் கதை வி விஜயேந்திர பிரசாத் வசனம் பாருச்சி பிரதர்ஸ்  இசை மணிசர்மா  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.   அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.  மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்