இடுகைகள்

துருக்கி - ஜனநாயக ஆபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துருக்கியில் குலையும் ஜனநாயகம்!

படம்
ஜனநாயக பயம்! இருபது ஆண்டுகளுக்கு மேலாக துருக்கியை ஆளும் தையீப் எர்டோகனுக்கு நாட்டின் லிரா மதிப்பு சரிவைவிட ஜனநாயகம் மேலெழுந்துவிடுமோ என்ற பயமே அதிகமாக உள்ளது. அவரின் ஆட்சிக்காலத்தின் டாலருக்கு எதிஆன லிரா மதிப்பு மிக தாழ்ந்தது இதுவே முதல்முறை. எர்டோகனுக்கு முன்பு துருக்கி 12 அரசுகளையும, ஒன்பது அதிபர்களையும் பார்த்த நாடு. 2002 ஆம் ஆண்டு எர்டோகனின் ஏகேபி கட்சி பெரும்பான்மையுடன் வென்றது. அடுத்த நான்கே மாதங்களில் தன்மீதான வழக்குகளை விலக்கி அதிபரானார் எர்டோகன். பின்னர் நடந்த 2011 தேர்தலில் மிக எளிதாக வென்றவரை இஸ்லாம் தீவிரவாத திட்டங்களுடன் செயல்படுகிறார் பிற கட்சிகள் குற்றம்சாட்டின.  மதப்பள்ளிகளை அதிகரித்ததோடு அவருக்கு எதிரான கலகத்தையும் 2016 ஆம் ஆண்டு ஒடுக்கினார். இப்பெயரில் தனக்கு எதிரான கட்சிக்கார ர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை என அனைவரையும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வதைத்து சிறையில் அடைத்தார். புதிய துருக்கியை முஸ்லீம் நாடாக மாற்ற நினைக்கும் எர்டோகனுக்கு எதிராக மக்கள் கூட்டணி அரசு( Muharrem Ince ) உருவாகி செயல்பட்டு வருகிறது. இது தவிர நான்கு பிரப