பன்பட்டர்ஜாம் எக்ஸ்டென்டட் - பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு
அறிமுகம்... வீரசுப்பி தாஸ், மெகந்தியா நாட்டை ஆளும் சர்வாதிகாரி. முன்னதாக நாடு ஜனநாயக தன்மையில் இயங்கியது. பின்னாளில், கல்வியறிவு இல்லாத மூடநம்பிக்கை கொண்ட விலங்குகளின் குதத்தை வழிபடும் பெரும்பான்மை மக்களே வீரசுப்பியின் ஆதரவாளர்கள். இதற்காக அவர் போலிச்செய்திகளை மெகந்தீயம் என்ற அரசு டிவி, தனியார் டிவி சேனல்கள் வழியாக பரப்பத் தொடங்கினார். ஜூமன் என்ற குதிரைக் கடவுளின் பக்தனாக காட்டிக்கொண்ட வீரசுப்பி, பிறகு தானே ஜூமனின் மறுபிறப்பு என கூறிக்கொண்டு தன்னுடைய சிலைகளை நாடெங்கும் வைக்கத் தொடங்கினார். வீரசுப்பிக்கு பொய்,புரட்டு, பித்தலாட்டம் என்ற தாய்க்கழகம் உண்டு. அவரது தொண்டர்களை அங்கிருந்து பொறுக்கி எடுத்து கலவரப்படைக்கு ஆள் சேர்க்கிறார். பெருந்தொற்றுக்கு எதிரான சிரிப்பு 2 பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே, நமது நாட்டில் பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் அதற்கு பலியாகி வருகிறார்கள். பரவாயில்லை. பூநூலியர்கள் நோய்த்தொற்றுக்கான சடங்குகளைக்கூறி அதைச்செய்ய கோரிக்கை விடுத்தனர். இத்தனை நாட்கள் மக்கள் வலியிலும...