இடுகைகள்

அயலான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயலும் புதிய ஆராய்ச்சி!

படம்
                வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும்