இடுகைகள்

அஷ்விகா கபூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  திரைப்படக் கலைஞர் அஷ்விகா கபூர் அஷ்விதா கபூர் க்ரீன் ஆஸ்கர் வென்ற கானுயிர் திரைப்பட கலைஞர் நான் கானுயிர் திரைப்படக்கலைஞர் மற்றும் அறிவியல் செய்திகளை பகிர்பவர், இயற்கை செயல்பாட்டாளர்.  சிறுவயதிலேயே நான் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவளாக இருந்தேன். எங்கள் குடும்பம் கொல்கத்தாவில் இருந்தபோது தங்கியிருந்த 12 வது மாடி முழுக்க ஆதரவற்று கிடந்த விலங்குகளை கொண்டு வந்து வைத்திருந்தோம்.  கோழிகள், புறா,  முயல், முயல் ஆகியவற்றை நாங்கள் வளர்த்து வந்தோம். ஏறத்தாழ பண்ணை போலவே இருந்தது. பயணம் செய்யும் சூழலிலும் இந்த உறவு தொடர்ந்தது. இப்போது தங்கியுள்ள வீடுகளில் கூட அருகிலுள்ள இரண்டு பூனைக்குட்டிகளோடு நட்பு உள்ளது. நான் விசில் அடித்தால் அவை இரண்டும் பால்கனிக்கு அருகில் வரும். ஒடாகோ பல்கலைக்கழகத்தில் இயற்கை வரலாறு பற்றி படிக்க விரும்பினேன். படிப்பை முடித்தபிறகு, 2014ஆம் ஆண்டு தொடங்கி இயற்கை சார்ந்த திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். இயற்கை செயல்பாட்டாளர் அஷ்விகா கபூர் என்னுடைய படங்களில் புகழ்பெற்றது நியூசிலாந்தில் எடுத்த காகாபோ கிளி பற்றியது. உலகத்தில் உள்ள மிக முக்கியப் பறவை இது. நான் படம் எடுக்கும்போத