இடுகைகள்

தகுதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

படம்
  பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ் கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார்.  யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். ''&#

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் ம

பெண்களை தலைவராக கொண்டுள்ள நாடுகள் சிறப்பான வளர்ச்சியையும் பாதுகாப்பையும் பெற்றுள்ளன! - அனிதா பாட்டியா

படம்
                நேர்காணல் அனிதா பாட்டியா ஐ . நா அமைப்பின் துணைத்தலைவர் பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதற்கும் , அரசு பதவிகளில் அமர்வதற்கும் தடையாக உள்ள விஷயங்கள் என்ன ? நாங்கள் இதுபற்றி செய்த ஆய்வில் 80 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ( பெண்கள் ), உளவியல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தே அந்த இடங்களை அடைந்திருந்தது தெரிய வந்தது மேலும் அலுவலக ரீதியாக முக்கியமான இடங்களுக்கு முன்னேற பல்வேறு உடல்ரீதியான உள்ள ரீதியான வன்முறைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது . நேரடியாக சொல்வது என்றால் , பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பல்வேறு நாட்டு அரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை . பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தேர்தல் முறை அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குமா ? இந்த முறையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் . ஆண் வேட்பாளர்களின் அதே எண்ணிக்கையில் பெண்களுக்கும் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் . மேலும் , அவர்கள் அங்கு வெற்றி பெறும் வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டால் பெண்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் . எனவே , பெண்கள் பற்றி முன்முடிவுகளை எடுக்காமல் அவர்களுக்க

வங்கிகளின் வகைகள் என்ன, அதன் தகுதி, திறன்கள்!

படம்
          பணம் கையாளப்பழகுவோம் வங்கிகளின் புதிய பிரிவுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாரம்பரியமான வங்கிகள் மட்டுமன்றி , நவீன காலத்திற்கேற்ப நிதி வங்கிகள் , சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டு வருகின்றன . இவ்வகை நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன .     நிதி வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ .1 லட்சம் அளவுக்ககு மிகாமல் டெபாசிட் பெறலாம் . ஏடிஎம் , டெபிட் கார்டுகளை வழங்கலாம் . கிரடிட் வழங்க முடியாது . கடன்களை வழங்க முடியாது . நிதி வங்கிகள் மியூசுவல் பண்ட் மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகளை வழங்குகிறார்கள் . சிறு வங்கிகள் இவை சிறு , குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ .25 லட்சம் வரை கடன்களை வழங்குகின்றன . முறைப்படுத்தாத துறை சார்ந்து சிறு வங்கிகள் செயல்படுகின்றன . வணிகப் பிரதிநிதி   இவர் வங்கி சார்ந்து அதன் பிரதிநிதியாக செயல்படுபவர் . தொலைதூர கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவைகளை வழங்குவார் . பிரதிநிதியின் பணிகள் வங்கிக்கணக்கு தொடங்க உதவுவது