பெண்களை தலைவராக கொண்டுள்ள நாடுகள் சிறப்பான வளர்ச்சியையும் பாதுகாப்பையும் பெற்றுள்ளன! - அனிதா பாட்டியா

 

 

 

 

 

 

UN Secretary General Antonio Guterres Appoints Indian ...

 

 


நேர்காணல்


அனிதா பாட்டியா


.நா அமைப்பின் துணைத்தலைவர்



பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதற்கும், அரசு பதவிகளில் அமர்வதற்கும் தடையாக உள்ள விஷயங்கள் என்ன?


நாங்கள் இதுபற்றி செய்த ஆய்வில் 80 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள்(பெண்கள்), உளவியல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தே அந்த இடங்களை அடைந்திருந்தது தெரிய வந்தது மேலும் அலுவலக ரீதியாக முக்கியமான இடங்களுக்கு முன்னேற பல்வேறு உடல்ரீதியான உள்ள ரீதியான வன்முறைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது. நேரடியாக சொல்வது என்றால், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பல்வேறு நாட்டு அரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை.


பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தேர்தல் முறை அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குமா?


இந்த முறையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான். ஆண் வேட்பாளர்களின் அதே எண்ணிக்கையில் பெண்களுக்கும் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், அவர்கள் அங்கு வெற்றி பெறும் வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டால் பெண்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே, பெண்கள் பற்றி முன்முடிவுகளை எடுக்காமல் அவர்களுக்கு முடிந்தளவு அதிக வாய்ப்புகளை வழங்குவது அவர்கள் முன்னேற உதவும்.


கோவிட் -19 பெண் தலைவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதா?


பெண்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த உலக நாடுகளில் கோவிட் 19 கட்டுப்பாடு பிறர் பாராட்டும்படி இருந்தது. அரசியல் பதவிகளில் பெண்களுக்கு குறைவான இடங்களே கொடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அதிலும் நோய்க்கட்டுப்பாடு தொடர்பாக சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தது பெண்கள்தான். நோய்த்தொற்று காலகட்டம் அரசியல் மற்றும் அறிவியல் தளங்களில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் கொண்டது என புரிய வைத்துள்ளது.



பஞ்சாயத்து முறையில் பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது பயன் கொடுக்குமா?


இந்தியாவில் நாங்கள் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்துதான் வேலை செய்கிறோ்ம். பெண்களுக்கு அவர்களின் பணி பற்றியும், கடமை பற்றியும் வகுப்புகளை எடுக்கிறோம். இங்கு பெரும்பாலும் பெண்கள் தொகுதியில் பெண்கள் நிறுத்தப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அவரது உறவினர்களின் கையில்தான் உள்ளது. கிராமங்களிலுள்ள பஞ்சாயத்துகளில் கல்வி, குடிநீர், சுகாதாரம் சார்ந்த பணிகளில் பெண்களின் ஆளுமைத்திறன் தேவைப்படுகிறது. அந்த அமைப்பு வலுவாக உள்ளதற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியமான காரணம்.




பெண்களுக்கான வாய்ப்பு என்றாலும் அது ஆண்களின் ஒத்துழைப்பின்றி நடைமுறையில் சாத்தியமில்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?


அவளுக்காக அவன் எனும் திட்டத்தை இதற்காகவே உருவாக்கியுள்ளோம். மாணவர்களின் கல்வித்திட்டத்தில் நாங்கள் இந்த கொள்கையை உருவாக்கும்போது, மாணவர்கள் பெண்களின் முக்கியத்துவத்தையும் சமத்து்வத்தையும் பேணுவார்கள். அலுவலகம் மட்டுமல்ல வீட்டு வேலைகளிலும் எந்த பாகுபாடும் இருக்காது. பெய்ஜிங்கில் 25 சதவீத பெண்களை அரசியல் அமைப்பில் கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று 13 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே பல்வேறு நாடுகளில் அரசு அதிகார அமைப்பில் உள்ளனர். 23 நாடுகளில் மட்டுமே பெண்கள் நாட்டை வழிநடத்துகிறார்கள்.


டைம்ஸ் ஆப் இந்தியா


ருத்ரநீல் கோஷ்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்