வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

 

 

 

 Light Bulb, Man, Surrealism, Current, Light, Glow, Lamp

 

 

 

வணிக ரீதியான மின் விளக்குகள்


சர் ஹம்பிரி டேவி


1802ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி, பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார். அவரது சோதனை பயன் கொடுத்தது. பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை. ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.


வாரன் டி லா ரூ


1840ஆம் ஆண்டு வேதியியலாளரும், வானியலாளருமான ரூ, பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார். இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான். ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல். எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை.


ஜீன் ராபர்ட் ஹூடின்



1852ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார். ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை, விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை. எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை.


ஜோசப் ஸ்வான்


பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்டுபிடித்தார். கார்பன் இழை பல்புகளை முதலில் உருவாக்கியவர் இவரே. இதன்மூலம் நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. சில வீடுகளில் தியேட்டர்களில் தனது பல்புகளை பொருத்தினார். பின்னர் எடிசனுடன் இணைந்து எடிசன் எலக்ட்ரிக் நிறுவனத்தை தொடங்கினார்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்