பெண்கள் மீதான அத்துமீறலுக்கு உதவுகிறதா ஹோலி பண்டிகை?
ஹோலி
கொண்டாட்டம் வேண்டாம்! - அலறும் பெண்கள்
ஹோலி கொண்டாடுவது சந்தோஷமான அனுபவம்தான். ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா, தீராத ஏக்கங்களை தீர்த்துக்கொள்ளும் விழாவாக மாறியுள்ளது. இதில் இப்போது கலந்துகொள்ளும் பெண்கள் விலகத் தொடங்கியுள்ளனர். ஏன் அதில் என்ன பிரச்னை என்கிறீர்களா?
விந்தணுக்களை நிரம்பிய பலூன்களை பெண்கள் மீது வீசுவது, வசதியாக கிடைத்த வாய்ப்பு சிறு பெண்களை அந்தரங்க இடங்களில் தடவுவது, தொடுவது என எல்லை மீறும் அனுபவங்கள் நடந்து வருகின்றன. பொதுவாக இதனைப பற்றி ட்விட்டரில் பதிவு செய்பவர்களை இந்து எதிரிகள் என தேச பக்தர்கள் முத்திரை குத்தினாலும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு கூட விட மாட்டார்கள். இதில் பாதிக்கப்படும் பெண்களின் தவறு என்ன இருக்கிறது? அவர்கள் எதற்கு வெட்கப்படவேண்டும்?
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் ஹோலி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஊருக்கு செல்லத் தொடங்கிவிடுவார்கள். எதற்காக என்கிறீர்களா? ஹோலி விழா அன்று பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பதால்தான். வட இந்திய பெண்கள் பொது இடங்களுக்கு வரும் விழாதான் ஹோலி. எனவே இந்த வாய்ப்பை பலரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். முதலில் ஒரு நாள் கொண்டாட்டமாக இருந்த விழா, இப்போது ஒரு வாரம் நடைபெறுகிறது. சேப்டிபின் என்ற ஆப், பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து உதவுகிறது. இதனால் ஹோலி மட்டுமல்ல பிற நாட்களிலும் கூட பெண்ளள் த்ங்கள் பாதுகாப்பை உறதி செய்துகொள்ளலாம். ‘’’வண்ணங்களை பிறரின் உடலில் பூசும் விளையாட்டுதான் ஹோலி. பிறரின் உடலைத் தொடுவது ஆண்கள் தவறு என உணருவதில்லை.’’ என்றார் ஆரா்ய்ச்சியாளர் தீப்தி கிருஷ்ணா. இதற்கு ஒரே தீர்வு, பெண்கள் முடிந்தளவு ஒரேகுழுவாக சேர்ந்து ஹோலியைக் கொண்டாடுவதுதான். எல்லை மீற்லை உடனடியாக தட்டிக்கேட்கவும் தயங்க கூடாது.
டைம்ஸ் ஆப் இந்தியா
கேட்டகி தேசாய்
கருத்துகள்
கருத்துரையிடுக