தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

 

 

 

 

 

டெல்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் -அரவிந்த் ...
ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்

 

 

மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள். 

 இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும். 

அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை என்பதுதான். இதனை சரி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆம் ஆத்மி அரசுக்கு முழு அதிகாரங்களும் கொடுத்துவிடுவது. இதன்மூலம் அவர்கள் செய்யும் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு. எனவே, தேவையில்லாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டும் பிரச்னைகள் இருக்காது. அவர்கள் செய்யும் நிர்வாக தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு என சௌக்கியமாக மத்திய அரசு பிற நிர்வாக விஷயங்களைப் பார்க்கலாம். 

இரண்டாவது விஷயம், அங்கு தேர்தலே நடத்தாமல் நேரடியாக தனது அதிகாரிகளை நியமித்து ஆட்சி செய்யலாம். டெல்லி போன்ற பெரு நகரங்களில் மூன்றில் இரு பங்கு மக்கள் அங்கீகாரமற்ற குடியிருப்புகளிலும் குடிசைகளிலும், சேரிப்பகுதிகளிலும் வாழ்கின்றன. அவர்களை மத்திய அரசு நேரடியாக தனது அதிகாரத்தின் மூலம் ஏதாவது நல்ல விஷயங்கள் செய்யலாம். பெரும்பாலும் செய்யமாட்டார்கள் என்றாலும் தலைநகரிலும் பூ பூத்துவிட்டது என பேனரில் போட்டுக்கொண்டு எப்போதும் போல வணிகர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கலாம். 

ஆனால் தேசிய ஜனநாயக அரசு மெல்ல அரசியலமைப்பு சட்டத்தை கரையான் போல அரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தேர்தல் என்பது கண்துடைப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த விஷயங்களையும் செய்யமுடியாமல் போராட்டம் நடத்தினால், நிலைமை எப்படியிருக்கும்? மத்திய அரசின் ஏகபோக சர்வாதிகாரத்தால் ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல அவர்களை நம்பியுள்ள மக்களுக்கும் கஷ்டம்தான் நேர்ந்து வருகிறது. 

அங்கு, 1,484 ச.கி.மீ. தூரத்தில் 15 மில்லியன் மக்கள் வசித்து வருகி்ன்றனர்.  பெருநகரமான டெல்லியில் அங்கு, தனிநபர் வருமானத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. உலகளவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமும் இதுதான். இங்கு நடைபெறும் அனைத்து பணிகளை மூன்று முனிசிபாலிட்டி நிறுவனங்கள் கவனித்துக்கொள்கின்றன. இதனால் பல்வேறு பணிகளில் தொய்வும், கால தாமதமும் ஏற்பட்டு வருகிறது. 


சட்டம் என்பது ஆசனவாய் போல என்று கவிஞரும் நாடக ஆசிரியருமான ஜார்ஜ் சாம்மேன் கூறியுள்ளார். இவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனால் இன்று மத்திய அரசு செய்யும் பல்வேறு செயல்களை எப்படி சட்டத்தை நமக்கு ஏற்றபடி வளைத்துக்கொள்ளலாம் என்பது போலவே இருக்கிறது. இதனால் டெல்லி அரசு அனைத்து விஷயங்களுக்கும் நீதிமன்ற கதவுகளை தட்டவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. தற்போது தலைநகரம் என்றாலும் விரைவில் நாட்டில் பல்வேறு பகுதிகளும் மாநில அரசுகள் இதேபோக்கை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதாவது, பிற க்ட்சி அரசுகள் ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களில் மேம்பாட்டு செயல்பாடுகளை மேற்கொள்வது கடினமாகும். 



டிஎன்ஐஇ

பிரபு சாவ்லா கட்டுரையைத் தழுவியது






கருத்துகள்