சூரியக்கடிகாரம் தோன்றியது எப்படி?
இன்று ஸ்மார்ட்போனில் மணி பார்க்கத் தொடங்கிவிட்டதால் பெரும்பாலான கை கடிகாரங்கள் அனைத்துமே அந்தஸ்தைக் காட்டும் கடிகாரங்களாக மாறிவிட்டது. இதனால் கடிகார நிறுவனங்கள் பிராந்தியப் பெருமை பேசும் கடிகாரங்களை தயாரிக்கின்றன. தங்கம், பிளாட்டினம், வைரம் என அதனை அலங்கரித்து வருகின்றன.
சூரியக் கடிகாரம்
சூரியன் கிழக்கில் உதித்தவுடன் அதன் நிழல் எப்படி விழும் என்பதை குச்சி வைத்து கணிக்கும் முறை. மோசமானது என்று இன்று கூறலாம். ஆனால் அன்றைக்கு இதுவே பெரிய விஞ்ஞானமுறை. ஆனால் இதை வைத்து இரவில் மணி பார்க்க முடியாது. இதற்காக நட்சத்திரங்களை கூட்டிக்கழித்து வரிசையைப் பார்த்து மணியைச் சொல்லும் முறையை கிரேக்கநாட்டு மக்கள் கண்டறிந்தனர். எகிப்தில் நீர் கடிகாரம் கூட முயன்றார்கள். உருளை வடிவ கட்டிடத்தில் நீரை நிரப்பி வெளியேறும் நீர் அளவைக் கணித்து நேரத்தை கண்டுபிடிக்கலாம். ஆனால் பனிக்காலத்தில் நீர் உறைந்துவிடுவதால் இதில் நேரத்தைக் கணிக்க முடியாது.
பாக்கெட் வாட்சுகள், கைகடிகாரங்கள்
பெண்டுலமாடி கடிகாரம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதனை மாற்றியது பாக்கெட் கடிகாரங்கள்தான். அதனை 1509ஆம் ஆண்டு பீட்டர் ஹெனலெய்ன் கண்டுபிடித்தார். அப்போதும் கூட அதிக எடை கொண்டதாகவே இருந்தது. ஆனாலும் மக்களுகுக பாக்கெட் கடிகாரம் பிடித்துவிட்டது. இதனை கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் மேம்படுத்தினார். அதற்குப்பிறகு கைகடிகாரங்கள் பிரபலம் அடைந்தன. இதனை 1868ஆ்ம் ஆண்டு ஸ்வீஸ் நாட்டு நிறுவனம் படேக் பிலிப்பே கண்டுபிடித்தது. முதலில் இதனை பணக்காரர்கள்தான் பயன்படுத்தினர். பிறகு முதல் உலகப்போர் வந்தது. ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கான நேரம், சாப்பிடும் நேரம் ஆகியவற்றை கணக்கிட கைகடிகாரத்தை பயன்படுத்தினர். பின்னாளில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கைகடிகாரங்கள் வந்துவிட்டன. சொல்ல மறந்துவிட்டேன். பாக்கெட் கடிகாரம் வந்தவுடனே ரயில் நிலைய மாஸ்டர்கள் சரியான நேரத்தில் ரயில் வருகிறதாக இல்லையா என்பதை பார்க்கத்தொடங்கினர். இதுமட்டுமன்றி, பல்வேறு வேலைகளும் எளிதாகி விட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக