ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மருத்துவரின் கனவும், அவரை பகடைக்காயாக்கும் மருத்துவமனை சூழ்ச்சிகளும்! - எ மிராக்கிள் - துருக்கி தொடர் - முதல் பாகம்

 

 

 

 

 

The 14 Newest and The Best Turkish TV Series in 2020-21 ...

 

 

எ மிராக்கிள்


துருக்கி தொடர்




குட் டாக்டர் எனும் தென்கொரிய தொடரை ரீமேக்கியிருக்கிறார்கள். ஆனால் காட்சிகளில் நடித்துள்ளவர்கள் நிறைய வேறுபாடுகளை காட்டியுள்ளதோடு காட்சிகளும் மாற்றப்பட்டுள்ளன.


ஆட்டிசமும், சாவன்ட் சிண்ட்ரோம் என்ற குறைபாடும் கொண்ட அலி பாபா, ஹயாத் எனும் பன்னோக்கு மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறான். அவனை அங்கு தலைமை மருத்துவராக உள்ளவர் தனது செல்வாக்கினால் சேர்க்கிறார். காரணம், அவனை வளர்த்து கவனித்துக்கொண்டது அவர்தான். ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் அவனை வைத்தே தலைமை மருத்துவரை வேலையை விட்டு நீக்கலாம். என அரசியல் விளையாட்டு நடக்கிறது. இந்த அரசியல் விளையாட்டு அலியை பந்தாடியதா, அவனது அறுவை சிகிச்சை நிபுணராகும் கனவு என்னவானது என்பதைத்த்தான் தொடர் சொல்லுகிறது.


தொடரில் மொத்தம் 22 எபிசோடுகள், ஒரு எபிசோடு என்பது நாற்பது நிமிடங்ங்கள் வருகிறது.


A Struggle of Savant Syndrome Doctor: Mucize Doktor ...

ஆட்டிசம் பாதிப்பு பற்றிய எண்ணங்களை இத்தொடர் மாற்றும் என உறுதியாக நம்பலாம். இயல்பான வாழ்க்கை என்பது ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு சாத்தியமில்லை.


ஆட்டிச குறைபாட்டிற்காக அலி சொந்த குடும்பத்திலிருந்து அனாதை இல்லத்திற்கு விரட்டப்படுகிறான். அவனை அங்கு சேர்ந்து பார்த்துக்கொள்ளும் மருத்துவர் ஹாதில். தனது சொந்த மகளை பலிகொடுத்துவிட்டு அதற்கு பரிகாரமாக அலியை பராமரிக்கிறார்.


உண்மையில் அலியின் ரத்த தொடர்பில்லாத அப்பா என்று சொல்லலாம். அவனை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தனது பதவியைக் கூட கைவிட தயாராக இருக்கிறார். அவர் போர்டு உறுப்பினர்களிடம் கேட்கும் ஒரு வாய்ப்பு என்பது உண்மையில் நம்மை கலங்க வைக்க கூடிய காட்சி. தொடரில் உணர்வுப்பூர்வமாக சிறப்பாக நடித்துள்ள பாத்திரம் என டாக்டர் ஹாதிலைக் கூறலா். இவருக்கும் மருத்துவமனை தலைவரான பெலிசுக்குமான உறவு ஆச்சரியம் தரக்கூடியது

 

EN - Turkish television series and actors panosundaki Pin

டாக்டர் அலி பாத்திரம்தான் முதன்மையானது. யாருமே அவர்போல இருக்கமாட்டார்கள் என டாக்டர் நாஸ்லி கூட ஒருமுறை மனம் விட்டு சொல்லிவிடுகிறாள். அப்படியென்ன இந்த கேரக்டரில் விசேஷம் என்றால், மனதில் தோன்றுவதை சொல்லிவிடுவது, எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் நோயாளிகளைக் காப்பாற்ற ஓடுவது, யாராவது கடுமையான திட்டினால் உடனே பயந்து அங்கிருந்து ஓடுவது என வரும் காட்சிகள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார் அலி பாபா. துருக்கி நடிகர் உண்மையில் கடினமாக பயிற்சி செய்து நடித்துள்ளார் என்றே சொல்லாம்,. முகம் பார்க்காமல் பேசுவது, பதற்றத்தில் கைகளை பின்னிக்கொள்வது, இரைச்சலின்போது யோசிக்க முடியாமல் தடுமாறுவது, ஹாதிலுக்காக அவனிடம் நாஸ்லி நட்பாவதை உணர்ந்து நொறுங்கிப் போவது, டாக்டர் ஃபெர்மன் அவரை மிரட்டும்போது நடுங்குவது என நிறைய காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். குறிப்பாக யூட்யூப் பிரபலமான சிறுவனை காரை விட்டு இறங்கி வரச்சொல்லும்போது அவர் பேசும் வசனம், அவரைச்சுற்றியுள்ளவர்களை அவர் எப்படி பார்க்கிறார் என்பதை நெகிழ்ச்சியாக சொல்லும் காட்சி.


ஹாதிலின் சீடரான ஃபெர்மனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. பிறருக்கு உதவி செய்யவேண்டும் என மனதார நினைப்பவர்தான். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் ஈகோ கொண்டவர். அலியை சந்திக்கும் முதல் காட்சியில் அதனை உணர்த்தியிருப்பார். அவனது புத்திசாலித்தனத்தால் அவரது ஈகோ காயப்பட, முடிந்தளவு அவனை தள்ளியே வைத்திருப்பார். இதற்கிடையில் அவனது ஐடியாக்கள் அறுவை சிகிச்சையில் பிரயோஜனமாக மெல்ல அவனைக் கவனிக்கத் தொடங்குகிறார். முதல் பாகத்தில் அவரது மனதில் உள்ள வலியும் வேதனையும் ஒரு காட்சியில் மட்டும் காட்டப்படுகிறது. மாநாடு ஒன்றுக்காக செல்கிறேன் என்று கிளம்பிச்செல்லும் காட்சி அது.


Reha Özcan (acted as Doctor Adil) is the head doctor and the member of the managing board of the hospital 

 

அலியை மறுக்கும் ஒரு காட்சியில் ஹாதில் சிம்பிளாக சொல்லுவார். நீ எப்போதாவது துணிச்சலாக சவாலான அறுவை சிகிச்சையை செஞ்சிருக்கிறியா? ஆனால் அலி செய்வான். இன்னொரு சர்ஜனோடு சேர்ந்து ஆபரேஷன் செய்றது பெரிய விஷயமே கிடையாது. அந்த துணிச்சல் அலிகிட்ட இருக்கு. இதே காரணத்துக்காகத்தான் அவனை நீ வெறுக்கிற இல்ல? உண்மையில் இது அற்புதமான காட்சியும் கூட.


அலியின் அறுவை சிகிச்சை தொடர்பான புத்திசாலித்தனம், ஃபெர்மன் தவிர்க்கமுடியாதபடி அவரை கவனிக்க வைத்துக்கொண்டே இருக்கும். இதனால் அவர் அவனை அறுவை சிகிச்சையில் கூட கலந்துகொள்ள வைத்து கவனித்துக்கொண்டே இருப்பார். ஒருகட்டத்தில் தனது பெயரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் நோயாளிகளிடம் பேசுவதைக் கண்டு அவரே ஆச்சரியப்படுவார்.


இத்தொடர் வெறும் அலி பற்றி மட்டும் பேசாமல், அவரை பிறர் எப்படி பார்க்கிறார்கள், அவருடைய உறவு முறைகள், மருத்துவ உலகம் எப்படி ஆட்டிசத்தை அணுகுகிறது, அங்கு வரும் நோயாளிகளின் மனநிலை ஆகியவற்றை பற்றியும் அழகாக பேசியுள்ளது. இதனால் வெப் தொடரை பார்க்க சுவாரசியமாக உள்ளது.

Sinem Ünsal (acted as Assistant Doctor Nazlı) is another promising actress of Miracle Doctor Turkish TV series

இந்த தொடருக்கும், கொரிய தொடரான டாக்டர் ஜானுக்கும் பொதுவான தன்மைகள் உண்டு. இரு நாயகர்களுமே குணப்படுத்த முடியாத நோய் அல்லது குறைபாட்டைக் கொண்டவர்கள். இருவருக்குமே கடந்த காலம் அவர்கள் செய்த செயல்களால் வலி நிரம்பியதாக உள்ளது. உலகம் எதனை அவர்கள் சாதனை செய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கடந்த கால தவறுகளை ஒப்பித்துக்கொண்டே இருக்கிறது. இரு தொடரின் நாயகர்களுமே தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எப்படியென்றால் ஒரு நோயாளி அவமானப்படுத்தி அவர்களை அடிக்க வந்தாலும் கூட உங்களுக்கு சிகிச்சை தேவை சார் என்று சொல்லும் அளவுக்கு மனதில் அவர்களின் பால் கனிவு கொண்டவர்களாக உள்ளனர்.


எ மிராக்கிள் தொடரில் அலியின் காதல் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அவருக்கான பிரச்சனைகளும் வலுவாக தொடங்கியுள்ளன. மருத்துவமனையை கைப்பற்றும் இரு பெண்களுக்கு இடையிலான மோதலில் அலியும் ஹாதிலும் ப்கடைக் காய்களாக உருட்டப்படுகின்றனர். அதில் கூடுதலாக இணைவது மருத்துவர் நாஸ்லி.


இந்த தொடரில் பல்வேறு பாத்திரங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம் அவ்வளவு அழகாக அதனை உருவாக்கியிருக்கிறார்கள். சக மனிதன் குறைபாடு உடையவனாக பலவீனம் உள்ளவனாக இருந்தாலும் அவன் மீது அன்பு காட்டவேண்டும் என்று சொன்ன விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.


கோமாளிமேடை டீம்


நன்றி

எம்எக்ஸ் பிளேயர்

more details about this series...

https://www.doyouknowturkey.com/a-struggle-of-savant-syndrome-doctor-mucize-doktor-miracle-doctor-turkish-tv-series/

5



கருத்துகள்