கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்
அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும். ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை
வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி. ஆங்கில உலகில் அழகு, நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர், லாமர்.
1914ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார். இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர். நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார். முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர், பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார். அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார். படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார். போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது, தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார். இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது. சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார்.
இரண்டாம் உலகப்போரின்போது, மக்கள் கஷ்டப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் லாமரும் இசை அமைப்பாளர் ஜார்ஜ் அந்தெயிலும் இணைந்து ப்ரிக்வன்சி ஹாப்பிங் என்பதைக் கண்டுபிடித்தனர். அப்போது ஜெர்மனி ராணுவம், பிற நாடுகளின் சிக்னல்களை இடைமறித்து கப்பல்களை நொறுக்கி வந்தது. அதை தடுக்க லாமர் செய்த முயற்சி பயன் கொடுத்தது. இதன் மூலம்தான் இன்று நாம் பயன்படுத்தும் ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான காப்புரிமை காலாவதியான பிறகே ராணுவம் அதனை ஏற்றது. இதனால் அவருக்கு முறையான காப்புரிமை மட்டுமல்ல அதை கண்டுபிடித்த புகழும் பெயரும் கூட கிடைக்கவில்லை.
உலகம் லாமரின் வெளி அழகை மட்டுமே கவனித்தது. இதனால் அவர் மூளையால் வியர்வை சிந்தி கண்டுபிடித்த விஷயங்கள் ஏதும் வெளியே வரவில்லை. அதனை மக்கள் தெரிந்தேதான் புறக்கணித்தார்களா என்றும் தெரியவில்லை. இன்று அவரது இறப்பிறகு பிறகு கண்டுபிடிப்பாளர்களுக்கான மரியாதையை அமெரிக்கா அளித்து வருகிறது.
லாமர் பற்றிய ஐந்து விஷயங்கள்
லாமர் தனது இறுதிக்காலத்தில் பெரும்பாலும் வீட்டை விட்டு அதிகம் வெளியே வரவில்லை. போனில் சராசரியாக ஏழு மணிநேரங்கள் பேசி வந்தார். 1997ஆம் ஆண்டு கண்டுபிடிப்புக்கான ஆ்ஸ்கர் விருது என்று கூறப்படும் விருது லாமருக்கு வழங்கப்பட்டது.
லாமர் தனது அழகுக்காகவே பல்வேறு படங்களில் இடம்பெற்றார். இதனைக்கூட அவர் ஒரு பெண் அழகாக இருந்தால் போதும் படங்களில் தொடர்ந்து நடிக்கலாம். அ அவள் முட்டாளாக இருந்தாலும் நடிப்பதற்கு அது ஒரு பொருட்டல்ல என்றார்.
அமெரிக்காவில் போருக்கான நிதியாக பிரசாரம் செய்து 70 லட்சம் ரூபாயைத் திரட்டித் தந்தார். இத்தனைக்கும் இதைத் திரட்ட அவருக்கு ஒரு இரவு மட்டுமே தேவைப்பட்டது.
லாமர் சினிமாவில் நடிப்பதற்காக பல்வேறு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டார். இவரைப் பின்பற்றி பலரும் தங்கள் உறுப்புகளை மடித்து, சீர்திருத்திக்கொண்டு அழகானார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக