ஆன்டிசெப்டிக் முறையை மருத்துவர்களின் பிரசாரம் செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியவர்!

 

 

 

 

ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கிய ஜோசப் ...
ஜோசப் லிஸ்டர்

 

 

 

மருத்துவத்துறையில் இன்று டெட்டால், சேப்லான் என பல்வேறு ஆன்டிசெப்டிக் மருந்துகள் கிடைக்கின்றன. இதனை அறிமுகப்படுத்தியவர் யாரென்று தெரிந்து உய்வோமா? ஜோசப் லிஸ்டர் என்ற படிப்பில் மூழ்கி ஏராளமான தங்கமுலாம் பூசிய பதக்கங்களை பெற்ற மனிதர்தான் அறுவை சிகிச்சையை பாதுகாப்பானதாக மாற்றினார்.


1827ஆம்ஆண்டு 5 ஏப்ரலில் பிறந்தவர் குவாக்கர் குடும்ப வாரிசு. இவரது படிக்கும் நேரம் போக மீதி நேரம் போக அப்பாவின் நுண்ணோக்கியில் ஏராளமான நுண்ணுயிரிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார். இப்படிப்பட்டவருக்கு வேறு என்ற ஆசை இருக்கமுடியும்? மருத்துவராகவே ஆசைப்பட்டார். லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்படிப்பு பட்டம் படித்தார். 1848ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்தார். அப்போதுதான் மருத்துவத்துறையில் அனஸ்தீசியாவைப் பயன்படுத்துவது பரவலாகிக் கொண்டிருந்தது. அதில் நிறையப் பேர் சேர்ந்து பயின்று வந்தனர். 1846்ஆம் ஆண்டு ஈதர் அனஸ்தீசியா வல்லுநராக உருவானார். ஆனால் அப்போதும் பல்வேறு நோயாளிகள் நோய்த்தொற்று காரணமாக இறந்துபோனார்கள். இதற்கு காரணம் என மோசமான காற்றான மியாஸ்மாவைக் காரணமாக சொன்னார்கள். உண்மையில் மருத்து்வர்கள் சரியாக கையைக் கழுவாமல் அப்படியே சரவண பவனுக்கு சாப்பிட வந்தது போல அடுத்தடுத்த நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தார்கள்.


1853ஆம் ஆண்டு லிஸடர் எடின்பர்க் சென்று பேராசிரியர் ஜேம்ஸ் சைம் என்பவரை பார்த்துவிட்டு, மருத்துவத்தின் எதிர்காலம் பற்றி படித்தார். பின்னர் அவரின் மகளான ஆக்னஸை திருமணம் செய்துகொண்டார். ஆக்னஸ், ஆராய்ச்சியில் லிஸ்டருக்கு நிறைய உதவிகள் செய்தார். தனது 33 வயதில் கிளாக்சோ பல்கலைக்கழகத்தில் அறுவைசிகிச்சை பேராசிரியராக பணி செய்தார். மாணவர்களுக்கு உரையாற்றுவதில் சிறந்தவர் எனப் பெயர் எடுத்தவர். அப்போதும் அவரது மனதை ஆக்கிரமித்தது, நோயாளிகளின் ஏராளமான மரணங்கள்தான். அதனைப் பற்றி யோசித்து வந்தார்.


அப்போது பாஸ்டரின் ஆராய்ச்சி பற்றிய கட்டுரையைப் படித்தார். அதன்வழியாக, நோய்த்தொற்றுக்கு காரணம் கிருமிகள் என்று அடையாளம் கண்டார். திரவ கழிவுகளின் நாற்றத்தை சமாளிக்க கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்தி வந்த பொறியாளரின் செயல்பாட்டில் ஈடுபாடு கொண்டார். அதனால் கார்பாலிக் அமிலத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை கருவிகளைச்சுத்தம் செய்யக் கோரினார். இதனால் 50 சதவீதமாக இருந்த நோயாளிகளின் இறப்பு 15 சதவீதமாக குறைந்தது.



கருத்துகள்