டில்லிக்கு தனது காமிக்ஸை விற்க வந்து டரியலான ஜப்பானியரின் கதை! - ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011

 



Stupid Guy Goes to India – Book Review | Dream and reality.
தனது காமிக்ஸ் புத்தகத்துடன் யுகிச்சி யமமாட்சு


ஸ்டுப்பிட் கய் கோஸ் டு இந்தியா 2011

ஆங்கில மொழிபெயர்ப்பு 

குமார் சிவசுப்பிரமணியன்

முதிர்ச்சியானவர்களுக்கு மட்டும் -18 +

Stupid Guy Goes to India, by Yukichi Yamamatsu - Elen Turner Editorial  Services

மாங்கா காமிக்ஸ் என்பதற்கான மார்க்கெட் என்பது உலகளவில் தற்போது உருவாகி வருகிறது. இப்படி ஒரு மார்க்கெட்டை பயன்படுத்திக்கொள்ள ஜப்பான் கலைஞர் யுகிச்சி முயல்கிறார். அதற்காக இந்தியாவுக்கு வந்து படாதபாடு பட்டு தடுமாறுவதுதான் கிராபிக் நாவலின் மையம். 

ஜப்பானிய மொழி மட்டுமே தெரிந்த யுகிச்சி எப்படி அவருக்கு தொடர்பேயில்லாத இந்தியாவுக்கு வந்து காமிக்ஸை தயாரித்து விற்றார் என்பதுதான் கதை. இந்த கதைக்குள் ஏராளமான அவல நகைச்சுவை காட்சிகள் உள்ளன. குறிப்பாக வெளிநாட்டுக்காரன் என்றாலே பணம் நிறைய வைத்திருப்பான் என்று டீத்தூள், துணி, ஆட்டோவுக்கு அதிக பணம் என ஏமாற்றுவது நாவல் முழுக்க நடைபெறுகிறது. இதில் பாரபட்சமே கிடையாது. 

இத்தனையும் சமாளித்து அவர் ஹோட்டலில் தங்கியிருக்கிறார். பின் செலவு கட்டுப்படியாகாமல் தனி அறை பார்க்கிறார். அதற்கு அவர் ஏஜெண்டுகளை தேடி செல்வதும் நடக்கும் காட்சிகளும் சிரிக்க வைப்பதோடு, இப்படியுமா நடக்கும் என அதேநேரம் எண்ண வைக்கிறது. 


Stupid Guy Goes to India – Book Review | Dream and reality.


ஜப்பானிய மொழியில் அமைந்த நூலுக்கும் இந்திய மக்களின் மொழிக்கும் முக்கியமான வேறுபாடு, மொழியை இடமிருந்து வாசிப்பது. ஜப்பானில் வலமிருந்து இடமாக வாசிக்கிறார்கள். நாம் வாசித்த இந்த நூல் கூட வலது பக்கமிருந்து இடது பக்கமாக வாசிக்கவேண்டியுள்ளது. அதற்கான குறிப்பையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

இந்தியர்களின் பதில் சொல்லும் முறை, பிச்சை எடுக்க துரத்தி வருவது, வியாபாரம் செய்யும் போது இடைஞ்சல் தந்து துரத்துவது என பல்வேறு பிரச்னைகளை கிராபிக் நாவலில் நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். சில விஷயங்களை படிக்கும்போது டக்கென சிரித்தாலும், அடடா இப்படி நடந்துகொள்கிறார்களே என மனது வருந்துகிறது. கருப்பு வெள்ளை காமிக்ஸ்தான். சிறப்பாக வரையப்பட்டுள்ளது. 

நூல் முழுக்க ஏராளமான தகவல்கள், துல்லியமான விஷயங்கள் உள்ளன. குறிப்பாக பிரஸ் நிறுவனத்தின் கேட்கும் கட்டணங்கள், பிற வேலைகளுக்கான தொகை, சாப்பிடும் உணவு, டில்லி நகர தெருக்கள் என பல விஷயங்களும்  கூறப்படுகின்றன. 

கிராபிக் நாவல், வெளிநாட்டவருக்கு இந்தியாவைப் புரிய வைத்தது போலவே நமக்கும் டில்லி எப்படியிருக்கிறது என்பதை காட்சிபடுத்தியுள்ளது என்று சொல்லலாம். 

தனது வாழ்க்கையை அப்படியே கிராபிக் நாவலாக மாற்றியுள்ள ஐடியா, சிறப்பு. வாசிக்க நன்றாக உள்ளது. 


கோமாளிமேடை டீம் 


நன்றி

ஓவியர் பாலமுருகன்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்