சமூக வலைத்தளங்கள் அரசுக்கு பயனர் பற்றிய தகவல்களை அளிக்கின்றனவா?
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 560 மில்லியனாக உள்ளது. இதற்கடுத்த இடத்தில் வாட்ஸ் பயனாளர்கள் எண்ணிக்கை வருகிறது. மேலும் இதில் கண்காணிப்பு வந்தால் என்னாகும்? அனைத்து மக்களுமே அறிந்தோ அறியாமலே இதில் மாட்டிக்கொள்வோம்.
போனில் உள்ள குறுஞ்செய்தி வசதியை இன்று யாருமே பயன்படுத்தவில்லை. எளிமையாக போனின் டேட்டாவை ஆன் செய்துவிட்டு வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு காலை வணக்கம் தொடங்கி டீ குடிக்க ஆபீஸ் வரட்டுமா என்ற அளவில் பேசி வருகிறோம்.
2019ஆம் ஆண்டு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த ஆய்வுப்படி இந்தியாவிலுள்ள 92 பெண் அரசியல்வாதிகளுக்கு, சமூக வலைத்தளங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதூறு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதேபோல 2020இல் பெண்கள், குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் புழங்கிய வதந்தி ஒன்றை நம்பி மூன்று பேர்களை மக்கள் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
அரசு தற்போது 69 ஏ சட்டப்படி, குற்றவழக்கு தொடர்பாக கேட்கும் விவரங்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் தரவேண்டும். அப்படி தராதபோது அவர்கள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இதைத்தான் மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி வருகின்றனர். சிலர், இந்தியாவிற்கென தனி இணையம் இருந்தால் என்ன என்று சீனா அளவுக்கு யோசித்து ட்விட்டரின் நீலக்குருவிக்கு மஞ்சள் பெயின்ட் அடித்து ஆப்பை உருவாக்கியுள்ளனர். அரசுக்கு சரி என்று சமூக வலைத்தளங்கள் ஒப்புக்கொண்டால், வாடிக்கையாளர்கள் அதில் இணைந்து பயணிப்பது கடினம். நம்பகத்தன்மை இழந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திறன்பெற்ற அதிகாரிகள், பொறியாளர்கள் இருப்பதால் திறக்கமுடியாத விஷயங்களைக் கூட அவர்களே திறந்து பார்த்து வழக்குகளை முடிக்க உதவுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அந்தளவு அறிவுள்ளவர்களை எங்கு தேடுவது என நிறுவனங்களின் வாசலுக்கு சென்று நின்றுவிடுகிறார்கள். மூளையை செலவழித்தால் கரைந்துவிடும் என எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் என்று யோசிப்பவர்கள் இப்படித்தான் செயல்பட முடியும்.
2019இல் செயல்பாட்டாளர் ஷீலா ரஷீத், காஷ்மீரில் இந்திய ராணுவம் இழைத்த கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து செயலுக்காக வழக்கு பதியப்பட்டது. அடுத்து, 2020இல் கவிஞர் சிராஜ் பிசராலி இந்திய குடியுரிமைச்சட்டம் பற்றி கவிதை எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். சிறுபான்மையினர் கமிஷனைச் சேர்ந்த ஜபாருல் இஸ்மாயில் கான் என்பவர் இனவெறுப்பைத் தூண்டியதாக சொல்லி கைது செய்யப்பட்டுள்ளார. அரசுக்கு இந்த பதிவுகள் எப்படி தெரிய வந்தன. இணையத்திலுள்ள மக்களின் பதிவுகளை அரசு கண்காணிக்க முடியும் என்பதால்தான் எளிதாக குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து கைது செய்யமுடிகிறது. ஊடகங்களையும் தனது அதிகாரத்திறகேற்ப ஆட வைக்க முடிகிறது.
சமூக வலைத்தளங்களில் ஏ.ஐ பில்டர்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் வெள்ளையர், கருப்பினத்தவர், தாக்குதல், அச்சுறுத்தல் என்ற வார்த்தைகள் வந்தாலே குறிப்பிட்ட சேனல், பக்கம் தடுக்கப்பட்டு விடும். இந்தவகையில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த அந்தோனியோ ரேடியாக் என்பவரின் யூடியூப் சேனல் தடுக்கப்பட்டது. இந்த அல்காரிதம் ஸ்மார்ட் ஆனதா, என்றால் அப்படியெல்லாம்.கிடையாது. குறிப்பிட்ட வார்த்தைகளை தவறாக புரிந்துகொண்டு 82 சதவீத தளங்களை தடை செய்துள்ளது.
இதிலுள்ள அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் முறை நல்லதுதான். ஆனால் அது, மக்களுக்கு உதவ வேண்டும். அப்படியல்லாமல், அரசுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் மட்டுமே உதவும்.
பிஸினஸ் ஸ்டாண்டர்ட்
கீதாஞ்சலி கிருஷ்ணா
கருத்துகள்
கருத்துரையிடுக