இடுகைகள்

ரஞ்சித் திசாலே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு!

படம்
  பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு ! கடந்த டிசம்பர் 3 அன்று ரஞ்சித் திசாலே குளோபல் டீச்சர் பிரைஸ் எனும் முக்கியமான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் . அதைவிட முக்கியம் , தான் பெற்ற ஆசிரியர் பரிசுக்கான தொகையை அவரோடு போட்டியிட்ட பிறருக்கும் பகிர்ந்து அளிக்க முன்வந்துள்ளார் .    2006 ஆம் ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தார் திசாலே . ஒருகட்டத்தில் படிப்பில் நம்பிக்கை இழந்து அதனை கைவிட்டு கல்வி தொடர்பான டிப்ளமோ ஒன்றுக்கு விண்ணப்பித்தார் . அதற்கும் கூட அவராக விண்ணப்பிக்கவில்லை . ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான மகாதேவ் தேசாய் , அதாவது அவரது அப்பாதான் மகன் வீட்டில் சும்மாயிருப்பதை விரும்பாமல் அப்ளை செய் என்று ஊக்கம் கொடுத்து இருக்கிறார் . திசாலேவுக்கு டிப்ளமோ படிப்பின்போது மறக்கமுடியாத இருநபர்களின் அறிமுகம் நடந்தது . ஒருவர் , அமர் நல்வாடே , மற்றொருவர் ராஜேந்திரன் மானே . நல்வாடே ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி தோழனாக இருந்து கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார் . இதுதான் அவரை படிப்பில் நிலையாக நிறுத்தி படிக்க வைத்திருக்கிறது .