இடுகைகள்

மேரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். குழந்தை முன்பைப

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்பது நிரூபணமானது