கொடியை நகல் எடுக்க கூடாது!
தனித்துவம் கொண்ட கொடி! வாகைப்பூவோ, தூங்குமூஞ்சி பூவோ உருவாக்கும் கொடி தனித்துவமாக சொல்ல வரும் கருத்தை தெளிவாக கூறவேண்டும். இணையத்தில் நிறைய கொடி வடிவமைப்புகள், டெம்பிளேட்டுகள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து இசைக்கலைஞர் அனிருத் போல சாம்பிள் பார்த்து கடன் வாங்கி வெற்றியடையலாம் என நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது. நாட்டின் கொடி என்றால் அங்கு வசிக்கும் மக்கள், கலாசாரம், பெருமை, நிலப்பரப்பு என நிறைய விஷயங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும். இன்னொரு நாட்டின் கொடியைப் பார்த்து அப்படியே நகல் எடுப்பது விபரீதத்தில்தான் முடியும். கானா நாட்டின் கொடியைப் பாருங்கள். இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களோடு நடுவில் கருப்பு நட்சத்திரம் உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள பிறநாட்டு கொடிகளை அடிப்படையாக கொண்டு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தனித்தன்மையாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் கொடியைப் பார்த்தால் அப்படியே மொனாக்கோ நாட்டு கொடியைப் போலவே உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கொடியை அப்படியே தலைகீழாக்கினால் ஸ்பெயின், போலந்த...