கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!

 

 



 

கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு!

சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி.

டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டுள்ளது. நடுவில் கூட்டல் குறி உள்ளது. நியூ மெக்சிகோ மாகாண கொடியும் கூட அங்கு வாழும் ஸ்பானிய மக்கள், கலாசாரத்தைக் குறிக்கும் வகையில் எளிமையாக மஞ்சள் பின்னணியில் சிவப்பு நிற குறியீட்டைக் கொண்டுள்ளது. நடுவில் சூரியனைக் குறிக்கும் வட்டம் உள்ளது.

கொடி என்பது பார்வைக்கு தெளிவாக தெரிய வேண்டும். அதில் அமெரிக்கா, சீனா, என எழுத்துகள் இடம்பெறுவது பொருத்தமல்ல. எழுத்துகளை ஒருவர் தூரத்தில் இருந்து பார்த்து புரிந்துகொள்ளவும் முடியாது. கொடியை வடிவமைக்கும்போது போராட்ட பேனர் போல சிலர் நினைத்துவிடுகிறார்கள்.

இலச்சினை என்பது காகித தாளுக்கானது. அதில், இலச்சினைகள் தெளிவாக தெரியும். அவற்றை கொடியில் இடம்பெறச்செய்வது தவறு. அப்படியும் இலச்சினையை கொடியில் பயன்படுத்துவது என்றால் சில அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம். நுட்பமான தகவல்களைக் கொண்டதாக இலச்சினை இருந்தால், பார்ப்பவர்களுக்கு குழப்பமே மிஞ்சும். இலச்சினை கொண்ட கொடிகள் அனைத்துமே வெற்றி பெற்றவை அல்ல.

தெற்கு கரோலினா கொடியின் பனைமரமும் நிலவும் இருக்கும். இது குழப்பமே இல்லாத கொடி. அதே நேரத்தில் தெற்கு டகோடா கொடியை எடுத்துக்கொண்டால் சிக்கலான இலச்சினை இடம்பெற்றுள்ளது. மாகாண பெயர் இருமுறை இடம்பெற்றுள்ளது.

கோடெஸ் டி ஆர்மர் என்ற பிரான்ஸ் நாட்டு தீவைப் பார்ப்போம். இதன் கொடி, கடற்புற வடிவத்தை பறவைபோல அமைத்து காட்டியிருக்கிறார்கள். புத்திசாலித்தனமாக வடிவமைப்பு. இதைப்போலவே பெகுயிஸ் நேஷன் கொடியைப் பார்ப்போம்.இதில் மஞ்சள், இளம்பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் உள்ளன. நடுவில் சிவப்பு நிற வட்டம் உள்ளது. எளிதாக இக்கொடியைப் பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது.

thanks 

cyber simman
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்