நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

 

 

 

 



 

 

நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக  ஆளுநர்
போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி.

பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொழுப்பு உடலில் அதிகரிப்பது ஆகிய நோய்கள் ஏற்படுகிறது. மக்களவை உறுப்பினர் கட்டர், தனது தொகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய முடிவெடுத்தார். இதற்கான செயல்பாட்டிலும் மாத்வி சித்தூர் பங்கேற்றார். பல்வேறு இடங்களிலும் கையெழுத்து இயக்கங்களை நடத்தினார். 

 

பதிமூன்று வயதாகும் மாத்வி, கழிவறைக் காகிதங்கள், சுத்தம் செய்யும் திரவங்களில் உள்ள கடுமையான வேதிப்பொருட்களையும் தடுக்கவேண்டும் என இயங்கி வருகிறார். இவரது சூழல் சார்ந்த செயல்பாடுகளுக்காக ஐ.நாவின் குழந்தை உரிமைகளுக்கான கமிட்டியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெனிவாவில் குழந்தைகளுக்கான தூய்மையான, நிலைத்த தன்மை கொண்ட சூழல் பற்றி உரையும் ஆற்றியிருக்கிறார். கொலராடோவில் உள்ள ஜெஃபர்சன் கவுன்டியில் உள்ள அரசு பள்ளிகளில் எளிதாக மட்ககூடிய மதிய உணவு தட்டுகளை வழங்கவேண்டும் என கூறியிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் மசோதாவாக உருவாக்க நினைக்கும் முன்னரே செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது.

மாசுபாடு,சூழல் சார்ந்த மசோதாக்களை பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் லாபி செய்து எதிர்ப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த நிலையில் இளையோர்,  மசோதாக்களை பற்றிய அறிவுடன் சட்டமாக்க போராடுவது வரவேற்கத்தக்கது என கட்டர் கூறியிருக்கிறார். தனது அரசியல் நலனுக்காகவே அவர் கூறியிருந்தாலும் மாத்வி சித்தூரின் சூழல் சார்ந்த பணிகளும், அதற்கான முயற்சிகளும் பாராட்டத்தக்கவை. அப்போதுதான் சூழல் சார்ந்த பிரச்னைகளின் மீது மக்களின் கவனம் திரும்பும். மனதாலும் உடலாலும் நோயுற்ற, கெட்டுப்போன, நம்பிக்கையற்ற மக்கள் சமூகத்தைக் கொண்டு ஒரு நாட்டின் எதிர்காலத்தை எந்நாளும் கட்டமைக்க முடியாது.


#kidoftheyear #time magazine #madhvi chittoor #river cleanup #recycle #green legislation #senator #plastic foam #child rights #geneva #united nations #no plastic ninja #single use plastic #PFAS #bill #jared polis #earth #pollution #environment #colorado #lisa cutter

 டைம் இதழ்.

முந்தைய பதிவு உதவி - அவுட்லுக் இதழ்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்