நவீன காலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்! - மிஸ்டர் ரோனி

 

 

 

 



 

 

 

அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

ஒருவரின் ஆரோக்கியத்தை என்னென்ன விஷயங்கள் பாதிக்கும்?

ஒருவரின் வயது, பாலினம், வேலை, குடும்ப வரலாறு, குணம், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகிய அம்சங்கள் மாறுபாடாக அமைந்தால், குளறுபடியானால் உடல், மனம் என இரண்டுமே கெட்டுப்போகும். இதில் சில அம்சங்கள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவையாக இருக்கும். எப்போதும் இன்பத்தை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டு சோகமான துக்க கதைகளை பகிரும் நண்பர்களை விட்டு விலகுங்கள். சாதி, மதம், இனம் என பற்று கொண்ட ஆட்கள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்களோடு பேசுவது நேரத்திற்கு கேடு, உங்கள் மூளையிலும் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தினால், அதிலிருந்து விலகுங்கள். நாய், பூனையை வளர்க்க முயலுங்கள், குடும்பத்தினரோடு கிடைக்கும் நேரங்களில் வாயாடுங்கள். உங்கள் தன்னம்பிக்கை, அறிவு என இரண்டுமே வளரும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது?

சுற்றியுள்ள சைக்கோ சாடிஸ்டுகள்தான் என இன்ஸ்டன்டாக காரணம் கூறலாம். இருந்தாலும் அறிவியலில் காரணம் தேடுவோம். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தாமஸ் ஹெச் ஹோம்ஸ், ரிச்சர்ட் ஹெச் ரகே ஆகியோர் இணைந்து சோசியல் ரீஅட்ஜெஸ்ட்மென்ட் ஸ்கேல் என்ற அறிக்கையை எழுதினர். இந்த அறிக்கை தி ஜர்னல் ஆப் சைக்கோஸ்மேட்டிக் ரிசர்ச் இதழில் வெளியானது.

இதன்படி மனைவி அல்லது கணவன் இறப்பு, விவாகரத்து, மணமாகியும் தனியாக வாழ்வது, உறவினர் மறைவு, சிறைவாசம், நோய் ஆகியவை ஐம்பது புள்ளிகள் தொடங்கி நூறு புள்ளிகள் வரை வருகின்றன. இவையே அதிகம் மனிதர்களுக்கு மன அழுத்தம் தருகிற காரணங்கள். மனைவி அல்லது கணவர் இறப்பு என்பது நூறு புள்ளிகளைக் கொண்ட காரணம். அதுவே முன்னிலை பெறுகிறது. விவாகரத்து என்பது இரண்டாவதாக எழுபத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலம் 1967 என்பதால், நவீன காலத்தில் இவற்றில் மாறுதல்கள் இருக்கலாம் என்பதை மறக்காதீர்.

உதவி
தி ஹேண்டி சயின்ஸ் ஆன்சர் புக் 

பின்டிரெஸ்ட்
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்