பாலியல் சீண்டலை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது, எனக்கு துப்பாக்கி சுடும் போட்டிகள் இருந்தன!- மனுபாகர்

 

 

 

 

 

 


 

2024ஆம் ஆண்டு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நிறைய வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, வீரர்களை பாலியல் சீண்டல், வல்லுறவுக்கு உட்படுத்தியது என வலதுசாரி மதவாத கட்சி எப்போதும் போல நிறைய பாதகங்களை செய்தது. இதையெல்லாம் கடந்து வீரர்கள் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றவர், மனுபாகர். அதற்குப் பிறகு எவரும் வெண்கலம் என்பதையே தாண்டமுடியவில்லை. நீரஜ் சோப்ரா மட்டுமே ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார். வெண்கலம் என்பதை இந்தியாவின் பென்ச்மார்க்காக மாற்றி காட்டியவர் மனுபாகர். அரசின் கைக்கூலி ஊடகங்கள், மனுபாகருக்கும், நீரஜ் சோப்ராவுக்கு கல்யாணம் செய்து வைத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு இருவரையும் இணைத்து வினோதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அவரிடம் பேசினோம்.

திறமையை பாதுகாக்க வேண்டும் என கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்?
ஒரு வீரருக்கு விளையாட்டை கற்பதற்கான நேரம் என்று ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நீங்கள் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் திறமையை பாதுகாக்கும் அக்கறையே கிடையாது. சவுரப் சௌத்ரி என்ற பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? டோக்கியோவில் அவரின் ஸ்கோர் என்ன? அவர் பதக்கம் பெறாவிட்டாலும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், நாம் அவரை பாதுகாக்க என்ன செய்தோம்? ஏதும் செய்யவில்லை.

இந்தியா, இம்முறை நிறைய வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. வெண்கலப்பதக்கத்தை வெல்வதற்கு தனியாக போராட வேண்டியிருந்ததா?
நீங்கள் வெள்ளிப்பதக்கம் பெற்றால் மக்கள் யாருமே மகிழ்ச்சி கொள்வதில்லை. ஆனால், வெண்கலப்பதக்கத்தைப் பொறுத்தவரை நிலைமை அப்படியில்லை. ஏனெனில் இதை நாம் போராடி வெல்கிறோம். கலப்பு பிரிவில் நானும், சரப்ஜோத் சிங்கும் இணைந்து பதக்கம் வென்றோம். ஆனால், தங்கம் என்றால் தங்கம்தான். அதைப்போல ஏதுமில்லை.

வீரர்கள் சரியாக செயல்படாததைப் பற்றி பிரகாஷ் படுகோன் பேசியதைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?

இங்கு விளையாட்டில் எப்போதும் சர்ச்சைகள் உண்டு. நீங்கள் எப்படி யோசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே சர்ச்சைகள் வருகின்றன. வீரர்களான எங்களுக்கும் நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை உடனே தீர்க்க முடிவதில்லை. நாங்கள் அவற்றை மெல்ல கடந்து வருகிறோம். சில சமயங்களில் நமக்கு வரும் பிரச்னைகள் கூட நம்மை வலிமையாக்கும்.

வினோத் போகத்தின் பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் எனக்கு மூத்த சகோதரி போன்றவர். பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு போராடும் போராளி. தன்னுடைய முந்தைய ஒலிம்பிக் போட்டிகள் சார்ந்தும் கூட விட்டுக்கொடுக்காமல் இயங்குபவர். எனக்கு அவர் செய்த போராட்டங்கள், அதன் நிலைமை பற்றி ஆழமாக தெரியாது. எனக்கு அவர் மீது பெரிய மரியாதை உள்ளது. கடைசிவரை போராடுவேன் என்ற ஊக்கத்தை அவர் எனக்களிக்கிறார்.

மல்யுத்த வீராங்கனைகள் போராடும்போது பிற விளையாட்டு வீரர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காதது ஏன்?

நிறையப் பேர், போராட்டத்திற்கு ஆதரவாக நின்றிருப்பார்கள் என நினைக்கிறேன். வீரர்களைப் பொறுத்து நிலைமை மாறும். அவர்கள் வேறு ஏதாவது விஷயங்களில் பங்கேற்றிருப்பார்கள். எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் இருந்தன. என்னுடன் போனும் இல்லை. போட்டிக்கு செல்லும்போது நான் எதையும் எடுத்துச் செல்வதில்லை. நாளிதழை படிக்கவும் எனக்கு நேரமிருப்பதில்லை. ஏதாவது நடந்தால் கூட அதை கடைசியாக தெரிந்துக்கொள்ளும் ஆள் நான்தான்.

டைம்ஸ் ஆப் இந்தியா  


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்