சீனா - இந்தியா ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

 

 

 


ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

இன்றோ நாளையோ நிச்சயமாக ஆதிக்கத்தை அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடைபெறும். அது உறுதி. அப்போது அதில் யார் வெல்வது என்பதை ஒரு நாடு எந்தளவு செலவு செய்து ராணுவத்தை உருவாக்கியுள்ளது என்பதைப் பொறுத்தே கூற முடியும். இந்திய அரசு, இணையத்தின் கட்சி சார்ந்த கேலி வதைக்குழுக்களை வைத்து வெல்ல முடியாது. இந்துமத ராணுவ வீரர்கள் மட்டுமே போராடி வெற்றியைப் பெற்றுவிடுவார்களா என்றும் புரியவில்லை.  

சீனா, சாங்காய் கூட்டுறவு அமைப்பில் இடம்பெற்ற நாடுகளுடன் ராணுவப் பயிற்சிகளை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கியுள்ள பயிற்சிகளின் கூடவே, மேற்கு நாடுகளின் போர்முறைகளை அறிய வேண்டுமே?  அதற்காக பாகிஸ்தானின் நட்பு உதவுகிறது. அந்த நாட்டு ராணுவத்திற்கு அமெரிக்க அரசு பயிற்சி அளிக்கிறது. இப்படியாக சீனா தன்னை ராணுவத்தில் வலிமையான நாடாக வளர்த்துக்கொண்டுள்ளது.

புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

ராணுவ வீரர்களின் எண்ணிக்கை

சீனா - 20,35,000
இந்தியா - 14,55,550

ராணுவ பட்ஜெட்

சீனா - 231.4 பில்லியன் டாலர்கள்
இந்தியா - 75 பில்லியன் டாலர்கள்

விமானங்கள்
சீனா - 3,304
இந்தியா - 2,296

டாங்கிகள்

சீனா -5,000
இந்தியா - 4,614

போர்க்கப்பல்கள்
சீனா - 730
இந்தியா -294

விமானந்தாங்கி கப்பல்கள்
சீனா -2
இந்தியா -2

கவச வாகனங்கள்
சீனா -1,74, 300
இந்தியா - 1,51,248

சூழலைக் கணிப்பது, மேலதிகாரிகளின் எண்ணத்தை அறிவது, களத்தில் முடிவுகளை எடுப்பது, படைகளை அனுப்புவது, எதிர்பாராத சூழலை சந்திப்பது ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை சீன அதிபர் ஷி ச்சின்பிங் கடந்துவரவேண்டும் என மக்கள் விடுதலை ராணுவத்திடையே வலியுறுத்தியுள்ளார்.

சீனா, 2023ஆம் ஆண்டு ராணுவத்திற்கென 296 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாக சிப்ரி என்ற ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ராணுவச்செலவுகளை அதிகரிப்பதே சீனத்தின் கொள்கை. ஆனால் நடைமுறையில், ராணுவ செலவுகள் கூடி வருகின்றன. இந்திய ராணுவம் தனது ஆயுதங்களுக்கு பெருமளவில் இறக்குமதியை நம்பியே உள்ளது. சீனா, தனக்கான ஆயுதங்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது. இதனால், பெருமளவு செலவு கட்டுக்குள் உள்ளது.
2024ஆம் ஆண்டு திட்டவகுப்பு ஆதரவுப் படையை கலைத்துவிட்ட சீனா, மூன்று தனித்தன்மை கொண்ட படைகளை உருவாக்கியுள்ளது. விமானப்படை, இணைய படை, தகவல் ஆதரவுப்படை. தனது ராணுவத்தில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து சீனா, நிவர்த்தி செய்துள்ளது.

சீன ராணுவம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப அறிவுக்கான தனியார் அரசு கூட்டுறவு, தானியங்கி வாகனங்கள், இணையப்போர், ரோபோட்டிக்ஸ், எக்சோஸ்கெலிடன், ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், மனிதர்களற்ற அமைப்புகள் என பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவும் மேற்சொன்ன துறைகளில் முன்னேற முயல்கிறது. ராணுவ வலிமையில் சீனா அசைக்க முடியாத இடத்தில் உள்ளது என்பது உண்மை.

சீனத்திலும் வலதுசாரி மதவாத கட்சி தனது கிளையொன்றை தொடங்கினால், போரே இல்லாமல் நாட்டை எளிதாக வீழ்த்திவிட வாய்ப்புள்ளது. நாட்டை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடலாம்.
எஸ்எல் நரசிம்மன்
தி வீக்
தமிழாக்க கட்டுரை 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்