சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம்

 

 

 

 

 




சாதனை புரிந்த இளையோர் -
கெயவோன் வுடார்ட்
மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம்

இந்திய சினிமாக்களில் நன்றாக நடிக்க கூடிய, சினிமா குடும்ப செல்வாக்கு இல்லாதவர்களை ஓரம்கட்டும் போக்கு உள்ளது. இதை வெளிப்படையாக பெருமையாக இந்தி சினிமா ஆட்கள் செய்கிறார்கள். மற்றவர்கள் மறைவாக செய்கிறார்கள். சாதி, மதம், இனம் சார்ந்த வேறுபாடுகள் மாற்ற முடியாமல் இறுகிப்போன மனங்கள் அதிகாரத்தில் உள்ளன. எனவே, சூழல்கள் நாட்டுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்படி மாறியுள்ளளன. திரையில் மாற்றுத்திறனாளிகளை எப்படி காட்டுவது என நிறைய இயக்குநர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்களை கேலிக்குரியவர்களாக மாற்றி நகைச்சுவை செய்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவை நகைச்சுவையாக இருக்கிறதா என்று யோசிக்கத் தெரியவில்லை. தங்களது அறியாமையை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியுமா என்றால் அது இயக்குநரின் திறனைப் பொறுத்தது. அந்த வகையில், காது கேட்க முடியாத சிறார் நடிகரான கெய்வோன் உழைப்பும் போட்டு, அதற்கு காலமும் பயன் கொடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு தி லாஸ்ட் ஆப் அஸ் என்ற ஹெச்பிஓ தொடரில் நடித்தார். படத்தில் அவருக்கு காதுகேட்காத பாத்திரம். உண்மையிலேயே அவருக்கு காது கேட்காது என்ற செய்தி, தொடர் வெளியானபிறகே பார்வையாளர்களுக்கு தெரிய வந்தது.

தொடக்கத்தில் தொடரை உருவாக்கியவர்களில் ஒருவரான கிரெய்க் மேசனுக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த சைகை மொழி தெரிந்த எட்டு வயது சிறுவன் தேவைப்பட்டுள்ளான். அதற்காக எக்ஸ் தளத்தில் நடிகர்களை தேடும்போது, கெய்வோனின் அம்மா, மகனின் வீடியோ ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். இப்படித்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேசன் அதற்கு முன்னர், பலரது ஆடிஷன் வீடியோக்களைப் பார்த்தும் பாத்திரத்திற்கு நியாயம் செய்பவர்களாக தோன்றவில்லை என்று கூறியிருக்கிறார். கிரெய்க் மேசனுக்கு, திரையில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென தோன்றிய சிந்தனை, கெய்வோன் என்ற இளம் சிறார் நடிகனுக்கு உதவி புரிந்துள்ளது. கெய்வோன் இயல்பாகவே காது கேட்காதவர் என்பதால் பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது முக்கியமானது. அதை மறுக்க முடியாது. ஆனால், மாற்றுத்திறனாளி என்பதைக் கடந்து திரைப்பட நடிப்புக்கான ஆர்வம் பாராட்டும்படியாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தனது குறைபாடுகளைத் தாண்டி சாம் பர்ரல் என்ற பாத்திரத்தை கெய்வோன் சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறான்.

கடந்த ஆண்டு சிறந்த கௌரவ நடிகருக்கான எம்மி விருதுக்காக கெய்வோன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. தொலைக்காட்சி விருதுக்காக கருப்பினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை. இதில் அவரது வயதும் முக்கியமான அம்சமாகிறது.

காது கேட்காத பாத்திரங்களை திரையில் கவனமாக, உண்மையாக பிரதிபலிக்க வேண்டும் என நினைக்கிறேன். பொதுவாக நீங்கள் திரைப்படத்தில் பாத்திரங்கள் பேசுவதை உரையாடல் மூலம் அறிந்துகொள்வீர்கள். ஆனால், காது கேட்காதவர்கள் சைகை மொழியால் பேசும்போதுதான் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும் என கெய்வோன் கூறுகிறான். கெய்வோன் அவனது வயதுக்கான புரிதலில் காது கேட்காத பிரச்னையை மையப்படுத்தி பேசினாலும், உலகம் முழுக்க தொடரைப் பார்ப்பது அவனது அருமையான நடிப்புத் திறனுக்காகத்தான். ஐஎம்டிபி தளமும் கெய்வோனை முக்கிய நட்சத்திரமாக அங்கீகரித்து பாராட்டியுள்ளது. மாற்றுத்திறனாளி என்பதை கூறாமலேயே நடிப்புக்காக கெய்வோன் பெரும் உயரங்களை தொட வாய்ப்புள்ளது.

மேக்னா மெக்கிளஸ்கி
டைம்

#keivonn woodard #the last of us #hbo #post apocalyptic world #epic #emmy 2023 #8year old #endure and survive #deaf #sam burrell #breakout star #craig mazin

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்