சாதனை புரிந்த இளையோர் - தீ விபத்து அலாரம் - சான்யா கில்

 

 

 

 

 





 

 

சாதனை புரிந்த இளையோர்
தீ விபத்து அலாரம்
சான்யா கில்

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பதிமூன்று வயதான சான்யா கில் வாழ்கிறார். இவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள உணவகம் ஸ்டவ்வை ஒழுங்காக அணைக்காமல் விட்டதால் தீப்பிடித்து எரிந்தது. அன்று தொடங்கி இன்றுவரை சான்யாவின் அம்மா, சமையல் அறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா என்ற இருமுறை சரிபார்க்கும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சான்யா, எங்கோ நடந்த விபத்து என நினைக்காமல் தீ பற்றும்போதே பயனருக்கு செய்தி, எச்சரிக்கை தெரிவிக்கும் கருவி ஒன்றை அல்காரிதம் எழுதி உருவாக்கியிருக்கிறார்.

தெர்மல் கேமரா, சிறிய கணினி ஆகியவை சான்யாவின் கருவியில் இணைந்துள்ளன. இவரது கருவி, இரண்டாயிரம் போட்டியாளர்களைக் கடந்து 25 ஆயிரம் டாலர்கள் கொண்ட அறிவியல் பரிசை வென்றிருக்கிறது. இந்த அறிவியல் போட்டிக்கு 65 ஆயிரம் பள்ளி மாணவர்கள் போட்டியிட்டால் அதில் பத்து சதவீதம்பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போது அந்த அறிவியல் போட்டி எந்தளவு கடுமையாக இருக்கும் என புரிந்திருக்கும்தானே?

 சொசைட்டி ஃபார் சயின்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு, அறிவியல் துறையில் சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு அறிவியல் ஆராய்ச்சி, போட்டிகள், நூல்கள் வெளியீடு ஆகிய பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு நடத்திய போட்டிதான் தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக்  ஜூனியர் இன்னோவேட்டர்ஸ் சேலஞ்ச். அதில்தான் சான்யா வென்றார்.

சான்யா, தனது பைத்தான் கோடிங்கை கிட்ஹப்பில் வெளியிட்டு ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். தான் உருவாக்கிய கருவிக்கு அவர் காப்புரிமையும் பெறவில்லை. காப்புரிமை பெற்றால், அனைத்து மக்களும் இக்கருவியை எளிதாக பெற்று தீ விபத்துகளை தவிர்க்க முடியாமல் போகவாய்ப்புள்ளது என கரிசனமாக பேசுகிறார். அமெரிக்க அரசின் தீயணைப்புத்துறை தலைவரான லோரி மூர் மெரெலை சந்தித்து பேசியிருக்கிறார். லோரிக்கு சான்யாவின் கருவி பற்றி தெரிந்திருந்தது. அமெரிக்க அரசு, சான்யா கில்லுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. ஆப்பை வெளியிடவும் ஆதரவு தெரிவித்துள்ளது. நவீன மாற்றமாக பைத்தானைவிட செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படுவதால், பிழைகளை சீர்திருத்தி கருவியை மேம்படுத்த சான்யா முயன்று வருகிறார்.

#shanya gill #fire accidents #ingenuity #python #github #copyleft #patent #us fire depot. #invention #kid of the year #time magazine #thermo fisher scientific junior innovative challenge #society for science #maya ajmera #national fire production association #stem #trial #safe

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்