ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

 

 

 




 

 

 

 

அறிவியலால் வெல்வோம்
மிஸ்டர் ரோனி

கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்?

அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது.

வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளிதாக எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ளலாம். சிறந்த தேசியக்கொடிக்கு இது அடையாளம். மோசமான தேசியக்கொடிக்கு துர்க்மெனிஸ்தான் உதாரணம்.
இளம்பச்சை நிற பின்னணியில் நிலவும் நட்சத்திரங்களும் கூடவே ஐந்து அடையாளங்கள் உள்ளன. இதைப் பார்த்து ஒருவர் நினைவில் வைத்துக்கொள்வது கடினம். இதைப்போலவே, பே ஆப் துனிசியா கொடியும் நட்சத்திரங்கள், வாள் என நினைவில் வைத்துக்கொள்ளவே ஆறுமாதம் பயிற்சி செய்யவேண்டும்போ என நினைக்கவைப்பது. பின்னணியாக மஞ்சள் நிறமும், அதன் மேல் சிவப்பு, பச்சை நிறம் உள்ளது. இதை எளிதாக நினைவில் வைத்து தாளில் வரைந்து காட்டச்சொன்னால் சமயத்தில் துனியா நாட்டின் பிரதமரே தடுமாறிவிடுவார். காங்கோ நாட்டின் கொடியை சிறந்த கொடி என்று கூறலாம். பச்சை, மஞ்சள், சிவப்பு என மூன்று நிறங்கள் கொண்டுள்ள கொடியை எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுவிடலாம். திருப்பிப் போட்டாலும் பிரச்னை இல்லை.

தேசியக்கொடியில் குறியீடு அவசியமா?

அது நாட்டுக்கு நாடு வேறுபடும். கொடியில் உள்ள நிறங்களே பல்வேறு கருத்துகளை அடையாளம் காட்டும். எனவே, தனியாக குறிப்பிட்ட அடையாளங்களை கொடியில் சேர்க்க வேண்டியதில்லை. அது குழப்பத்தையே விளைவிக்கும். 1977-2011 காலகட்ட லிபியா நாட்டு கொடியைப் பார்த்தீர்களானால், அதில் பச்சை நிறம் கடந்து எதுவுமே இருக்காது. ஒற்றை பச்சை நிறம். இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் நாடு சரி, லிபியாவை தனித்தன்மையாக குறிக்கும் ஏதோவொன்று வேண்டுமே? ஆனால் வடிவமைப்பாளர் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆட்சியாளர்களும் எதுக்குப்பா அதெல்லாம் அப்படியே விடு என்று சொல்லிவிட்டார்கள் போல. மோசமான கொடிக்கு இது உதாரணம்.

இத்தாலி நாட்டு கொடியைப் பார்ப்போம். இந்த நாட்டுக் கொடியில் மூன்று நிறங்கள் உண்டு. பச்சை, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களும் புரட்சிகர தன்மையில் மேலிருந்து செங்குத்தாக கீழே இறங்கும் பட்டையாக உள்ளன. ஐரோப்பாவில் உள்ள பல நாட்டு கொடிகளும் கிடைமட்டமாக இருக்க, இத்தாலி மட்டும்தான் இப்படியான வடிவமைப்பு கொண்ட கொடியை வைத்திருக்கிறது. இந்த வகையில் நாட்டின் புரட்சி மனப்பான்மை வெளிப்படுகிறது. உக்ரைன் நாட்டு கொடியும் எளிமையான மெல்லிய நீலம், மஞ்சளைக் கொண்டுள்ளது. இக்கொடியை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். கோதுமை வயலுக்கு மேலுள்ள ஆகாயம் போல என கொடியை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்