இடுகைகள்

இந்திய அரசியலமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய அரசியலமைப்பை அலங்கரித்த சித்திர எழுத்து!

படம்
  வரலாறு போற்றும் சித்திர எழுத்துக் கலைஞர்! அண்மையில் இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதில், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் அரசியலமைப்புச் சட்டத்தை சித்திர எழுத்துக்களாக உருவாக்கியவர் பற்றி பலரும் நினைவுகூர்ந்தனர். சட்ட நூலை, ஆங்கில சித்திர எழுத்துக்களாக வடிவமைத்த மகத்தான கலைஞர், பிரேம் பிஹாரி நாராயண் ராய்ஸாதா (Prem Behari Narain Raizada).  பாரம்பரிய கலை! டில்லியில் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர் பிரேம். இவரது குடும்பமே சித்திர எழுத்துக்களை எழுதும் பெருமையும் புகழும் கொண்டது. இளமையில் பெற்றோர் காலமாகிவிட தாத்தா ராம் பிரசாத்திடம் வளர்ந்தார். அவர்தான் இவருக்கு சித்திரக்கலை எழுத்தின் அடிப்படைகளைக் கற்பித்தார். தொழில் நுட்பங்களை அறிவதில் தாய்மாமன் சத்தூர் பிஹாரி சக்சேனாவும் உதவினார்.  பிரேம் ஆங்கிலம், பாரசீகம் ஆகிய இருமொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.  டில்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பட்டதாரி.  பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளுக்கு பாரசீக மொழியைக் கற்பித்தும் வந்தார். உலகின் நீளமான இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு உர