இடுகைகள்

உரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

படம்
  உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை 1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது. உணவுக்கு கொடுத்த விலை எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.   மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தேவை அதிகமா

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை

லிக்விட் நானோ யூரியா- சாதாரண யூரியாவிற்கு மாற்று!

படம்
  இந்தியாவில் விரைவில் லிக்விட் நானோ யூரியா விற்பனைக்கு வரவிருக்கிறது இதனை குஜராத்தில் உள்ள கலோல் தொழிற்சாலை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்திய கூட்டுறவு விவசாயிகள் உரச்சங்க நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அரைலிட்டர் பாட்டில் 240 ரூபாய் வருகிறது. இதில் மானிய உதவி ஏதும் கிடையாது. சாதாரணமாக விவசாயிகள் வாங்கும் யூரியா 50 கிலோ 300க்கு விற்கிறார்கள். 300 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது.  உலகசந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கிறது. இதனை லிக்விட் நானோ யூரியா மாற்றும் என கருதப்படுகிறது.  யூரியா என்பதே நைட்ரஜன் சத்தை செடிகளுக்கு கொடுப்பதுதான். புதிய நானோ ரகத்தில் நைட்ரஜன் நானோ பார்டிக்கிள் வடிவில் இருக்கும். இதனை நேரடியாக செடி அல்லது பயிர் மீது தெளிக்க வேண்டியதுதான். சாதாரண யூரியாவின் செயல்திறன் 25 சதவீதம் என்றால் இதன் திறன் 85-90 சதவீதம் என்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை லிக்விட் நானோ யூரியா மூலம் இறக்குமதி குறையும் என நினைக்கிறது.  2 முதல்

செயற்கை வேதி உரங்களை முழுக்க கைவிடுவது கடினம்! - டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர்

படம்
  டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர் டெட் நார்தாஸ் இயற்கை சூழலியலாளர், ஆலோசகர் பொதுவாக இயற்கை விவசாயம் சார்ந்த வெற்றிக்கதைகளை அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையில் எப்படி இயற்கை விவசாயம் தவறாக போனது? வளர்ச்சி பெற்ற நாடுகளில் இயற்கை விவசாயம் செய்வது எளிது. அங்கு அதற்கென தனி விலை வைத்து வசதியான வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். இதில் குறைந்த விளைச்சல் வந்தாலும் கூட அவர்கள் அதற்கான இடுபொருட்களை குறைவாக பயன்படுத்துவார்கள். கிராக்கியைப் பொறுத்து விலையை கூடுதலாக வைத்து விற்பார்கள். நாட்டிலுள்ள அனைவரும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினால் நீங்கள் கூடுதல் விலைக்கு வைத்து விற்க முடியாது.  இயற்கை விவசாயம் சார்ந்த சந்தையில் அதிக பொருட்கள் உள்ளன. அவையும் அதிக விலையில் உள்ளன. இதனால், சாதாரண குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பொருட்களை வாங்க முடியாது. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் பொருட்களை உற்பத்தி செய்தால், பொருட்கள் அனைத்துமே விலை கூடித்தான் இருக்கும். இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கிறது.,  இப்படி விவசாயம் செய்வது நிலம், வேதிப்பொருள், பசுமை இல்ல வாயு வெளிப்

சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

படம்
  பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன.  இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது.  பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர்.  பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன்.  முப்பது ஆண்டுகளாக தன

பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

படம்
  சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான்.  பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன்.  கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை

பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

படம்
          மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது . டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது . அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன . இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது , விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் . இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது ? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான் . புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ .10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும் . பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று . காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது , மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது . இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன . விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர் .

டாய்லெட் கழிவுகள் என்னாகின்றன?

படம்
கழிவுகள் என்னாகின்றன? பொதுவாக மனிதக்கழிவுகளை தூ என தூக்கி எறிவது ரயிலில்தான். பிற இடங்களில் விமானம் போன்றவற்றில் அப்படி செய்வதில்லை. என்ன டெக்னிக்குகளை பயன்படுத்துகிறார்கள் என்று அறிவோம். பொதுவாக மனிதக்கழிவுகளை நீர் ஊற்றி ஃப்ளஷ் செய்தவுடன், அது கழிவுநீர் தொட்டிக்கு செல்லும். அங்கு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி கழிவின் நாற்றம், கிருமிகள் அகற்றப்படும். இது பொதுவான முறை. பின்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் மனிதக்கழிவுகளை உறையச்செய்து அதன் நாற்றம், கிருமியைக் குறைக்கிறது. உறையவைக்கும் நிகழ்வில் வெளிப்படும் வெப்பம் உங்கள் பூட்டிக்கு இதம் சேர்க்கும். நீரின்றி தவிக்கும் பகுதிகளில் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. நேராக கழிவறை சென்றுவிட்டு உபாதையை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம். மண்ணில் சேரும் கழிவுகள் மெல்ல பாக்டீரியா, வைரஸ் சேர்க்கப்பட்டு மண்ணுக்கு உரமாகும். மண் உரத்திற்கு அடுத்தபடி வேறென்ன தகனமேடைதான். உங்கள் உடலை எப்படி மின்தகனம் செய்கிறார்களோ அதேபோல் கழிவுகளையும் சாம்பலாக்குகிறார்கள். நன்றி: க்வார்ட்ஸ்

இயற்கை வளம் கெடும் பிரேசில்! - புதிய அதிபரின் அட்டகாசம்

படம்
பிரேசிலில் உரங்களுக்கு அனுமதி! பிரேசிலில் வலதுசாரி கருத்தியல்கொண்ட பொல்சொனோரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில் 152 உரங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். விவசாய அமைச்சகம் சார்ப்பில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவு உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் பிரேசில் முன்னணி வகிக்கிறது.  2015 ஆம் ஆண்டு 139 உரங்களும், 2018 ஆம் ஆண்டு 450 உரங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 1300 உரங்களுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கின்றன. உரக்கம்பெனிகளில் அமெரிக்க, சீனக்கம்பெனிகளே அதிகம்.  இதுகுறித்து தெரசா கிறிஸ்டினா, முழுக்க உரக்கம்பெனிகளுக்கு நாங்கள் அனுமதி தரவில்லை என சமாளிப்பு பதில் அளித்திருக்கிறார். விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நாங்கள் உரங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம். இதன்மூலம் சரியான உரங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. தனிநபர் ஒருவருக்கு தோராயமாக 7 லிட்டர் அளவு உரம் பயன்படுத்தப்படுவது பிரேசில் நாட்டில் மட்டும்தான். இதனால் உணவுப்பொருட்களின் வழியாக நச்சுப்பொருட்கள் அதிகரிக்கிறது என்ற உண்மை இவர்கள் அ