லிக்விட் நானோ யூரியா- சாதாரண யூரியாவிற்கு மாற்று!

 








இந்தியாவில் விரைவில் லிக்விட் நானோ யூரியா விற்பனைக்கு வரவிருக்கிறது இதனை குஜராத்தில் உள்ள கலோல் தொழிற்சாலை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை கடந்த வாரம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இந்திய கூட்டுறவு விவசாயிகள் உரச்சங்க நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலை அரைலிட்டர் பாட்டில் 240 ரூபாய் வருகிறது. இதில் மானிய உதவி ஏதும் கிடையாது. சாதாரணமாக விவசாயிகள் வாங்கும் யூரியா 50 கிலோ 300க்கு விற்கிறார்கள். 300 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க அரசு இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது. 

உலகசந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்கிறது. இதனை லிக்விட் நானோ யூரியா மாற்றும் என கருதப்படுகிறது. 

யூரியா என்பதே நைட்ரஜன் சத்தை செடிகளுக்கு கொடுப்பதுதான். புதிய நானோ ரகத்தில் நைட்ரஜன் நானோ பார்டிக்கிள் வடிவில் இருக்கும். இதனை நேரடியாக செடி அல்லது பயிர் மீது தெளிக்க வேண்டியதுதான். சாதாரண யூரியாவின் செயல்திறன் 25 சதவீதம் என்றால் இதன் திறன் 85-90 சதவீதம் என்கிறார்கள். அரசைப் பொறுத்தவரை லிக்விட் நானோ யூரியா மூலம் இறக்குமதி குறையும் என நினைக்கிறது. 

2 முதல் 4 மில்லி நானோ யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். இந்தியா முழுக்க 11 ஆயிரம் இடங்களில் 90 பயிர்களில் சோதித்திருக்கிறார்கள். 3.6 கோடி யூரியா பாட்டில்களை தயாரித்திருக்கிறது குஜராத் ஆலை. அதில் 2.5 கோடி பாட்டில்கள் விற்றுப்போய்விட்டன. இதேபோல நானோ டிஏபி, நானோ நுண் ஊட்டச்சத்துகள் என பல்வேறு தயாரிப்புகளை எதிர்காலத்தில் பார்க்க முடியும். நானோ யூரியா தொழிற்சாலையும் நாட்டின் பல்வேறு நகரங்களில்உருவாக்கப் படவிருக்கிறது. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்