அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்
அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் .
ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது
அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.
1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமியில் வந்து விழுந்தாலும் கூட அதன் பாதிப்பு குறைவாக இருக்கும்படி நாசா பார்த்துக்கொண்டது. 1979ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஸ்கைலேப் வந்து விழுந்தது. மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு சொந்தமான கடல் பகுதி என்பதால், குப்பைகளை கடலில் போட்டதற்கான 400 டாலர்களை நாசா ஆஸ்திரேலியாவிற்கு வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதே முக்கியமானது.
டெல் மீ வொய் இதழ்
நன்றி
https://tenor.com/view/super-thumbs-up-vadivelu-reaction-like-gif-13357480
கருத்துகள்
கருத்துரையிடுக