டைம் இதழின் செல்வாக்கு பெற்ற திரைப்படம், இசை துறை கலைஞர்கள்!

 

செல்வாக்கு பெற்ற மனிதரகள் 

கலை






சிமு லியூ

சீன கனட நடிகர்

கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் சக மனிதர் என்ற வகையில் நடிகர் சிமு லியூவின் திரைப்பட வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திறக்காத சினிமா கதவுகளை அவர் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும்  கனடா நாட்டுக்காரர்களுக்கு திறந்து வைத்துள்ளார். இனிமேல் இதுதொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளும் சிமு லியூவின் வெற்றியால் தான் சாத்தியமானது என  பிறர் கூறுவார்கள். 

சாங் சீ  திரைப்படத்தை சிமு லியூவுக்காகவே நான் மூன்று முறை பார்த்தேன். படத்தில் அவரின் நகைச்சுவை உணர்வு, போர்க்கலை பயிலும் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. தன்னைத்தானே சுய கிண்டல் செய்யும் அரிய குணம் சிமு லியூவுக்கு உண்டு. கச்சிதமான உடைகள் அவரை அழகாகவும் காட்டுகின்றன என்பது முக்கியமானது. 

வெறுப்புவாதம், இனவெறி, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வரும் நடிகர் சிமு லியூ. இவர் நமக்கான சூப்பர் ஹீரோவேதான்.  



சாண்ட்ரா ஓ 



2







ஜோ கிராவிட்ஸ் 

அமெரிக்க திரைப்பட நடிகை

ஜோ கிராவிட்ஸ் அழகு, புத்திசாலித்தனம் நிரம்பியவர். அவருடன் இரவு நேரங்களில் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன். அப்போதுதான் நடிப்புடன் அவருடைய நகைச்சுவை உணர்வை கண்டுபிடித்தேன். திரையில் நகைச்சுவை பகுதியில் நாங்கள் போட்டி போட்டு நடிப்போம். தனது நடிப்பு கடந்து கதைகளை எழுதுவது, நடிப்பிற்கான பல்வேறு கட்ட உழைப்பு அளிப்பது ஆகியவை ஜோவிடம் எனக்கு பிடித்த விஷயங்கள். 

அவருடன் பழகிய அவருடைய கோணத்தில் எதையும் அலட்டிக்கொள்ளாமல் உலகை பார்ப்பது எனக்கும் பழக்கமாகி வருகிறது. பேட்மேன் படத்தில், ஜோவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. கேட் வுமனாக சிறப்பாக நடித்திருந்தார். 


ரீஸ் விதர்ஸ்பூன்



3


ஜாஸ்மின் சுலிவன்

ஜாஸ்மின் எழுதிய முதல் பாடல் நீட் யூ பேட். இவரது பாடல்களில் ஏராளமான கருப்பின பெண்களின் கதைகளை சொல்ல முடிகிறது. அண்மையில் ஜாஸ்மின் கிராமி விருதை வென்றார். இவர் தன்னை விரும்புவதோடு, இருட்டிலிருந்து வெளியே வரவும் விரும்பினார். 

2021ஆம் ஆண்டு சோல் ட்ரெய்ன் இசை விருது நிகழ்ச்சியில் தனது சொந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். பிறருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கருப்பின பெண்களுக்கான அடையாளமாகவும் ஜாஸ்மின் இருக்கிறார். அவரை நண்பராக நினைப்பதில் எனக்கு பெருமைதான். உங்களுக்கு கிடைத்த பரிசை ஏற்று, உங்களுக்குள் உள்ள கடவுளை நம்புவதற்கும் சாட்சியாக ஜாஸ்மின் இருக்கிறார். 

ரிலே

டைம் இதழ் 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்