சிறுவயதிலிருந்தே பறவைகளை கவனிப்பது பிடிக்கும்!
அதிதி முரளிதர்
இயற்கை செயல்பாட்டாளர்
உங்களைப் பற்றி கூறுங்கள்.
நான் மும்பையில் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இயற்கை, பறவைகள் பற்றியும் நான் எனது எர்த்தி நோட்ஸ் என்ற வலைத்தளத்தில் எழுதி வந்தேன். இப்படித்தான் மெல்ல இயற்கை பற்றிய செயல்பாடுகளுக்குள் நான் வந்தேன்.
பறவைகளைக் கவனிக்கத் (Bird watching) தொடங்கியது எப்போது?
சிறுவயதில் அம்மாவுடன் உட்கார்ந்து, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது நினைவில் உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, உயிரியல் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிடுவேன். அப்போதும் வெளியே உள்ள பறவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஹூப்போ (Hoopoe) என்ற பறவை எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி வரும். சிறுவயதில் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த பறவைகள் என்னென்ன?
எனக்கு அனைத்து பறவைகளும் பிடிக்கும். ஆனால் சிறுவயதில், வால்க்ரீப்பர், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஃபயர் பிரெஸ்டெட் ஃபிளவர்பெக்கர் (Wallcreeper, Asian Fairy-bluebird, Fire-breasted Flowerpecker) ஆகிய பறவைகள் பிடித்தமானவை. இவையே அன்று என் கவனத்தை ஈர்த்தவை.
பறவை கவனித்தல் பற்றி பிறருக்கு கூறவிரும்பும் அறிவுரை என்ன?
பறவை கவனித்தலில் கண்களும், காதுகளும் கூர்மையாக இருப்பது அவசியம். இப்பணியில், நம்மால் சூழலில் ஏற்படும் மாற்றங்களையும் உணர்ந்திருக்கவேண்டும்.
https://birdcount.in/birder-profile-adithi-muralidhar/
https://earthlynotes.com/
கருத்துகள்
கருத்துரையிடுக