அலையாத்திக் காடுகளில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

 











அலையாற்றிக்காடுகளின் சிறப்பம்சங்கள்!

அலையாற்றிக் காடுகளிலுள்ள மரங்கள் எப்போதும் பசுமையாக உள்ள இலையுதிரா காடுகள் வகையைச் சேர்ந்தவை. இதன் காரணமாக கார்பன் டையாக்சைட் வாயுவை உட்கிரகித்து, ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இம்மரங்கள் தம் வேர்கள் மற்றும் தண்டுகளிலுள்ள சிறிய சுவாசிப்பு துளைகள் மூலம் காற்றை உறிஞ்சுகின்றன. இத்துளைகளுக்கு லென்டிசெல்ஸ் (Lenticels) என்று பெயர். 

அலையாற்றிக் காடுகளிலுள்ள ரைசோபோராசீயே (Rhizophoraceae) இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் இனப்பெருக்க முறைக்கு தாயோட்டு விதை முளைத்தல் (Vivipary)என்று பெயர். விலங்கினங்களைப் போல, விதைகளைக் கன்று போல ஈன்று வளர்க்கின்றன.

உலக வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, கடலோரப் பகுதிகள் நீரால் அரிக்கப்பட்டு வருகின்றன. அலையாற்றிக் காடுகள் உள்ள பகுதிகளில் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. இவை, இயற்கை அரணாக நின்று தம் வேர்களை நிலத்தில் படர்த்தி நிலப்பரப்பைக் காக்கின்றன. 

அலையாற்றிக் காடுகளில் கடல் மீன், இறால், சுறா ஆகியவை ஆண்டு முழுவதும் வலசை வருகின்றன. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்த பிறகே மீண்டும் கடலுக்கு செல்லும். இதன் காரணமாக அலையாற்றிக் காடுகளை சுற்றியுள்ள  மீனவர்களின் வாழ்வாதாரம் செழிப்படைகிறது. 

வலசை வரும் பறவைகள், தரைவாழ் பறவைகள், மீன்கள், தேனீக்கள், நீர்நாய், முப்பதிற்கும் மேற்பட்ட ஆமைகள், பட்டாம்பூச்சி வகைகள் என பல்வேறு உயிரிகளை ஒன்றிணைக்கும்  அதிசய இடமே, அலையாற்றிக் காடுகள். 

நன்றி

முனைவர் இரா.அருணா (கட்டுரைக்கான ஐடியா)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்