இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

 









ரீவைல்டிங் ஆப்பிரிக்கா

கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ்

ராபின்சன்

சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள். 





வொய் ஷார்க்ஸ் மேட்டர்

டேவிட் ஷிஃப்மேன்

ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ் 

விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார். 




பிளாட்டிபஸ் மேட்டர்ஸ் 

ஜாக் ஆஸ்பை

ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம்


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார். 






எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ் 

சீரியன் சம்னர் 

ஹார்பர் கோலின்ஸ் 

குளவிகள் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். பலரும் பார்த்து பயந்து தடுமாறுவது குளவிகளின் கடிக்குத்தான். இவை தேனீக்களுக்கு முன்னோராக வாழும் உயிரினம். பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்தும் குளவி சூழலியலில் முக்கியமானது. 






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்