சினிமா டூ தொழிலதிபர் - இரு குதிரை சவாரி - அனுஷ்கா சர்மா, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா

 










அனுஷ்கா சர்மா

2008ஆம் ஆண்டு ஷாரூக்கானின் ரப்னே பனா டி ஜோடி படத்தில் அறிமுகமானார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தமாகி டஜன் கணக்கிலான படங்களில் தெறமை காட்டினார். 2013ஆம் ஆண்டு க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதனை, அனுஷ்காவின் சகோதரர் கவனித்துக்கொள்கிறார். அனுஷ்கா நடிப்பதை மட்டும் பார்க்கிறார். அனுஷ்கா தயாரிப்பாளர் மட்டுமல்ல படங்களை உருவாக்கும் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு என அனைத்து செயல்முறையிலும் பங்கேற்று வருகிறார். 2015ஆம் ஆண்டு வெளியான என்ஹெச் 10 படம் இப்படித்தான் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 2017இல் பில்லாரி, 2018இல் பரி ஆகிய திரைப்படங்கள வெளியாயின. 


பேய்க்கதை, திகில் ஆகிய படங்களையே விரும்பி தயாரிக்கிறார். பல்ப்புல் -2020, பாதாள்லோக் 2020 ஆகிய இரண்டு ஓடிடி சீரிஸ்களும் அனுஷ்காவுக்கு நல்லப் பெயரை வாங்கிக்கொடுத்தன. இப்போது நுஸ் எனும் துணிகளை வடிவமைத்து விற்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  2018, 2019ஆம் ஆண்டுகளில் ஃபார்ச்சூன் இதழில் 50 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும், ஃபோர்ப்ஸ் ஆசியா 30 அண்டர் 30 பட்டியலிலும் இடம்பிடித்தார். 









ஆலியா பட்

பொது அறிவு கேள்விகளில் படு வீக் என்றாலும் நடிப்பு விஷயத்தில் சளைத்த பெண் கிடையாது இந்த ஆலியா செல்லம்.  2012ஆம் ஆண்டு ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில், கரண் ஜோகரால் அறிமுகமானார். பிறகு, 2014 இல் ஹைவே படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.  ஈத் எ மாமா எனும்  சூழலுக்கு உகந்த துணிகளை வடிவமைத்து விற்கும் ஜவுளி நிறுவனத்தை தொடங்கினார். 

2021ஆம் ஆண்டு நைகா எனும் பிராண்டில் முதலீடு செய்தார். 2017ஆம் ஆண்டு ஸ்டைல் கிராக்கர் எனும் பிராண்டில் முதலீடு செய்துள்ளார். தற்போது, பூல். கோ எனும் ஊதுபத்தி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 




பிரியங்கா சோப்ரா

2000ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்ட் விருது பெற்றவர், பிரியங்கா சோப்ரா.  2003ஆம் ஆண்டில், தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற படத்தில் அறிமுகமானார். 2004இல் அட்ராஸ் எனும் படத்தில் நெகடிவ்வான பாத்திரத்தில் நடித்து பிரமிக்க வைத்தார்.  பிறகு துறையில் பெரிய தடைகள் ஏதுமில்லை. 2015இல் பர்பிள் பெபிள் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இது, படம் மற்றும் டிவி தொடர்களை எடுக்கும் லட்சியத்தை கொண்டது.  2016இல் பிரியங்கா எடுத்த வென்டிலேட்டர் - வசூல் ரீதியாக வெற்றி கண்டது. பகுனா - தி லிட்டில் விசிட்டர் என்ற படம் நேபாள மொழியில் எடுக்கப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றது.  

அமெரிக்காவில் சோனா எனும் உணவகம், பம்பிள் டேட்டிங் ஆப் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார், அனோமலி எனும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்