பால் புதுமையினர் பற்றிய பயம் திரைப்படத்துறையினருக்கு உள்ளது! - இயக்குநர் ஒனீர்

 


2005ஆம் ஆண்டு ஓனீரின் மை பிரதர் நிகில் என்ற படம் வெளியானது. இது, இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளியான டொமினிக் டி சூசா என்பவரின் வாழ்க்கையை தழுவியது. பிறகு ஒனீர் எடுத்த படம், ஐ யம் -2010. இந்த படம் இந்திப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்களை ஒலிக்கும் இயக்குநர் ஓனீர் தனது சுயசரிதையை ஐ யம் ஓனீர் அண்ட் ஐ யம் கே என்ற நூலை எழுதியுள்ளார். 


திரைப்பட இயக்குநராக உங்களது பயணம், இத்துறையில் வெளியில் உள்ள நபராக அனுபவங்கள் என இரு பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம். 

திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர், எனது பாலின அடையாளம் என இரண்டுமே எனக்கு முக்கியமாக உள்ளது. நான் வாழும் காலத்தில் தன் பாலினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு பிறகு அக்குற்றம் குற்றமல்ல என மாறியது. பொது இடத்தில் நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். இளைஞர்களுக்கு அவர்களை வெளிப்படுத்த குரல் தேவைப்படுகிறது. என்னுடைய கதை அவர்களுக்கு உதவும்.  பள்ளி, கல்லூரி என பார்த்தாலும் எனக்கான முன்மாதிரிகள் வேறுபட்டவை. 

நீங்கள் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மை பியூட்டிபுல் லாண்ட்ரெட்டா  படத்தை பார்த்தீர்கள். அதில் பால் புதுமையினர் பாத்திரம் இருந்தது. அப்போது இருந்த சூழலுக்கும் இப்போதுக்கும் என்ன மாறுபாடு நடைபெற்றுள்ளது?

தன் பாலினச்சேர்க்கையாளர்கள் குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள்  என்பதும், அவர்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகள் கிடைக்கும் என்பதும் முக்கியமான மாற்றம். இன்று சிறு குறு கிராமங்களில் உள்ளவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக பால் புதுமையினர் என தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். முன்பை விட இளைஞர்கள் இனக்குழுவாக சிறப்பாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் பயணம் எளிதாகிறது. 

இந்திய சினிமாவில் என்னவிதமாக மாற்றம் நடைபெற்றுள்ளதாக நினைக்கிறீர்கள்?

2005ஆம்ஆண்டு நான் மை பிரதர் நிகில் படத்தை உருவாக்கிய போது அதற்கு யு சான்றிதழ் கிடைத்தது. முதன்மை பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறிவிடும். குடும்பமோ அப்பாத்திரத்தின்  காதலியோ பாலின அடையாளத்தை ஏற்க மாட்டார்கள் என காட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றும் மாற்றுப்பாலினத்தவர், தங்களை ஏற்றுக்கொள்ள பிறரை கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களை படத்தில் சித்தரிக்கும் நிலையும் மோசமாகவே இருக்கிறது. 

இங்கு படம் வெற்றி பெற்றால், அதே போல படங்களை உருவாக்குவார்கள். தேசியவாதிகளின் படங்கள், தென்னிந்த படங்களின் ரீமேக் ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 

377 என்ற பிரிவு நீக்கப்பட்டுவிட்ட பிறகு பால் புதுமையினர் பற்றிய கதைகளை சொல்ல பலரும் முன்வருகிறார்கள் என நினைக்கிறீர்களா?

இன்று பால் புதுமையினர் பற்றிய கதைகளை கூற நினைத்தால் ஸ்டூடியோக்கள் தன்பாலினச் சேர்க்கை சார்ந்த விஷயங்கள் கூடுதலாக இருக்கிறது. மெதுவாக அதனை செய்வோம் என கூறுகிறார்கள். நான் சொல்ல விரும்பும் கதை இவர்களின் கட்டமைப்பிற்குள் அடங்குவதில்லை. அண்மையில் பைன் கோன் என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இது தன் பாலினச்சேர்க்கையாளனின் காதல், வாழ்க்கை பற்றிய கதை. பொதுவாக இப்படிப்பட்ட கதைகள் காமத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். எனவே, மக்கள் இதனைப் பார்க்க கூச்சப்பட்டு தவிர்த்து விடுவார்கள். 

பொதுவாக ஒரினச்சேர்க்கையாளர்கள் என்றாலே காமம், காமம் தொடர்பான ஆசைகள் மட்டுமல்ல. என் நண்பர்கள் கூட தங்களது காதல், காதலிகள் பற்றி பேசும்போது எனது முறை வரும்போது என்னை ஏதும் கேட்கமாட்டார்கள். அக்கேள்வி என்னை சங்கடப்படுத்துவது என நினைத்தார்கள். ஆனால் உண்மை, ஆண்கள் பால் புதுமையினர் பற்றிய காதல் வாழ்க்கையை கேள்வி கேட்பதை தவிர்க்கிறார்கள். மிகவும் சங்கடமாக நினைக்கிறார்கள். பெண்கள் இந்த விவகாரத்தில் பாதுகாப்பானவர்கள். இதனால், பெண்களின் லெஸ்பியன் உறவுகளை படங்களில் நிறையவே பார்க்கலாம். 

இன்று அனைவருமே ஓரினச்சேர்க்கை பாத்திரங்களை விரும்புகிறார்கள். ஆனால் அதில் உடலுறவு என வரும்போது புனிதத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அப்போது இவர்கள் யார், என்னைப் போல் இல்லையே என்று தோன்றுகிறது. எங்களுக்காக எங்களைப் பற்றி பேசுபவர்கள் என்றாலே மதிப்பு தரத் தோன்றுவது உண்மை. 


நீங்கள் படத்தை உருவாக்கும்போது பார்வையாளர்களை மனதில் வைத்து வேலை செய்வீர்களா?

நான் படங்களை எனக்காக மட்டுமே உருவாக்குவதில்லை. வணிக ரீதியான வெற்றி என்னை பெரிதாக ஊக்கப்படுத்துவதில்லை. நான் இதுவரை எடுத்த படங்கள் எவையும் வணிக ரீதியாக வெற்றி பெற்றவை என்று கூறமுடியாது.  மை பிரதர் நிகில், ஐ யம் ஆகிய படங்களைப் பற்றி மக்கள் இத்தனை ஆண்டு காலம் பேசுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. படம் வெளியாகி இரண்டு வார காலம் என்ற எல்லையைத் தாண்டி மக்கள் படங்களைப் பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது அன்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 


பால் புதுமையினர் பற்றி ஆறு கதைகளை வைத்திருக்கிறேன். இக்கதைகளை பல்வேறு தளங்களில் எடுக்க நினைத்தும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் மறுக்கப்பட்டுவிட்டது. பிரைட் மாதம் என்று சொல்லி நான் உருவாக்கிய படங்களை கொண்டாடுபவர்கள் கூட புதிய படங்களை உருவாக்க வாய்ப்பு தருவதில்லை. அவர்கள் ஏதோ பீதியால் பயத்தால் பாதிக்கப்பட்டது போல தோன்றுகிறது. அவர்களின் அமைதி எனக்கு அதைத்தான் உணர்த்துகிறது. பால்புதுமையினர் பற்றி பார்க்க வேண்டிய படங்கள் - ஓனீர் பரிந்துரை

கால் மீ பை யுவர் நேம் 2017

மில்க் -2008

ஐ கில்டு மை மதர் 2009

மூன்லைட் 2016

பெயின் அண்ட் குளோரி 2019

ஹேப்பி டுகெதர் 1997

டோட்டல் எக்லிப்ஸ் 1995

படிக்க வேண்டிய நூல்கள்

ஃபன்னி பாய் 1994

ஷியாம் செல்வதுரை

ஹி ஃபார்கெட் டு சே குட்பை 2008

பெஞ்சமின் அலையர் சென்ஸ் IE

alaka sahaniகருத்துகள்

பிரபலமான இடுகைகள்