மோடி அரசு 2.0 - நிர்மலா சீதாராமன், அமித் ஷா செய்ததும், காத்திருக்கும் சவால்களும்!

 











பாஜக அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி!

மோடி 2.0

நிதித்துறையில் செய்தது என்ன?





2019ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக நிர்மலா பதவியேற்றார். அப்போது பொருளாதாரம், சற்று தேக்கத்தில் இருந்தது. உள்நாட்டு தேவை மற்றும் தனியார் முதலீடு ஆகியவற்றில் சுணக்கம் காணப்பட்டது. எந்த நிதியமைச்சரும் சந்திக்காத சவால்களை நிர்மலா எதிர்கொண்டிருக்கிறார். முக்கியமாக கோவிட் 19. 2020ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று லாக்டௌன் அமலுக்கு வந்தது. இதனால் இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை ஜிடிபி வளர்ச்சி காணப்பட்டது. 

உலக நாடுகள் அனைத்தும் பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கின. இதை நிர்மலா சற்று மாற்றியோசித்து செயல்படுத்தினார். பலவீனமாக உள்ள பிரிவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். சிறுகுறு தொழில்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்தார். 

இப்போது அவர் செய்த செயல்பாடு, திட்டங்களைப் பார்ப்போம். சுருக்கமாகத்தான். 

செய்தது!

மே 2020ஆம் ஆண்டு 20 லட்சரூபாய் மானிய உதவிகளை வழங்கியது இந்திய  அரசு

சிறு குறு தொழில்களுக்கான அவசரநிலை கடன் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 

2019-20, 2024-25 காலகட்டங்களில் தேசிய அடிப்படை கட்டுமானத்திட்டத்திற்காக 108 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. 

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்பது மூலமாக 6 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டது. 

பல்வேறு உற்பத்தி துறைகளில் உற்பத்தியைப் பொறுத்து ஊக்கத்தொகையை வழங்கும் திட்டத்தை அறிவித்தது இந்திய அரசு. 

சாதிக்க வேண்டியது

யுனிவர்சல் பேசிக் இன்கம் அல்லது காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டத்தை நகரிலும் நடைமுறைக்கு கொண்டு வருவது...

மாநிலங்களுடன் இணைந்து ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை வழங்கி தொழிலை ஊக்கப்படுத்துவது. 

மருந்துகளுக்கான ஆதாரப் பொருள், சமையல் எண்ணெய் எரிபொருள் ஆகியவற்றுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதை மாற்றுதல்

உற்பத்தி துறையில் கவனம் செலுத்துதல்


----------------------------------

2

அமித் ஷா

உள்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர்


பிரஷாந்த் கிஷோர் முதலில் மோடியை பிரபலப்படுத்தினார். ஆனால் அந்த திட்டத்தை பின்னாளில் சிறப்பாக மேம்படுத்தியது திரு. அமித்ஷா அவர்கள்தான். விவசாயிகள் போராட்டம் நடைபெற்றால் கூட உ.பியில் பாஜக சமாஜ்வாடியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது இதற்கு சான்று. 

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, வடகிழக்கு இந்தியாவில் அமைதி ஒப்பந்தங்களை உருவாக்கியது, குடியுரிமை சட்டத்தை 2024இல் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கவிருப்பது என அமித் ஷா எப்போதும் தனது எதிரிகளை பதற்றத்திலேயே வைத்திருக்கிறார். 

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கௌன்சிலுக்கும் அமித் ஷா தலைவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மோடிக்கு அடுத்து பாஜகவில் அதிகம் நினைவுகொள்ளும் தலைவராக அமித் ஷா உருவாகிவருகிறார். 

அவர் மூன்றாண்டு ஆட்சியில் செய்த செயல்கள், செய்யவேண்டியதையும் பார்ப்போம். 

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தார். அதன்பின் வந்த அனைத்து சிக்கல்களையும் சமாளித்தார். 

வடகிழக்கு இந்தியாவில் இருந்த புரட்சியாளர்கள் குழுவை சந்தித்துப் பேசி, அமைதி ஒப்பந்தங்களை உருவாக்கினார். 

மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலை மட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. 

கோவிட் -19 தளர்வுகளை அறிவித்து, மெல்ல நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது. 

காத்திருக்கும் சவால்கள் 


குடியுரிமை சட்டத்திற்கான விதிகள், அகதிகளுக்கு குடியுரிமைகளை வழங்குவது...

அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களுக்குமான சிவில் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது

வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்வது தொடர்பான உறுதியான நடவடிக்கைகள். 

 



 




இந்தியா டுடே 

ஸ்வேதா புன்ச்

கருத்துகள்