மக்களுக்கு துணையாக நிற்கும் இரு நண்பர்களின் வெட்டுக்குத்து கதை!

 















மகாநந்தி

ஸ்ரீஹரி, சுமந்த், அனுஷ்கா

இயக்கம் வி சமுத்ரா





ஒருவழியாக படம் முடிந்தபோது....

கதையின் கரு

நண்பர்களுக்குள் வரும் முட்டல் மோதல், நம்பிக்கை தான் கதை. 

ஆந்திராவில் உள்ள கிராமம். அங்கு தனது நிலபுலன்களை விற்று ஊர் மக்கள் வேலை செய்வதற்கு தொழிற்சாலை கட்ட நினைக்கிறார் சுவாமி நாயுடுவின் அப்பா. ஆனால், அதை ஊரில் உள்ள பணக்கார ர் ஏற்கவில்லை. அப்படி தொழிற்சாலைக்கு மக்கள் வேலைக்கு போனால் நமக்கு மதிப்பிருக்காது. நீ தொழிற்சாலை கட்டக்கூடாது என்று மிரட்டுகிறார். பிறகு ஒரு நல்லநாள் பார்த்து சுவாமி நாயுடுவின் பெற்றோரை வீடு புகுந்து தாக்கிக் கொல்கிறார். 

இதனால் சுவாமிநாயுடுவும் அவரது தங்கையும் அனாதை ஆகிறார்கள். படம் இப்படித்தான் தொடங்குகிறது. 

பிறகு சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எதிரிகளை பழிவாங்கிய சுவாமி நாயுடு ஊரில் பெரிய ஆளாக மாறியிருக்கிறார். அவருக்கு வலது இடது என இரு கரமுமாக இருப்பவன்தான் சங்கர். பார்த்தால் அண்ணன் தம்பி போல  தோன்றும் ஆனால் இருவரும் நண்பர்கள். சுவாமி நாயுடுவைப் பொறுத்தவரை அப்பாவின் கனவை நிறைவேற்றுவதுதான் பேஷன், ஆம்பிஷன், கனா எல்லாமே. இப்படி தொழிற்சாலை கட்டி முடிக்கும்போது எதிரிகளால் இடைஞ்சல் வர அதை அரிவாள், நாட்டு வெடிகுண்டு, கத்தி, கடப்பாறை என அனைத்து கருவிகளை வைத்து எதிர்கொண்டு சரி செய்கிறார்கள். 

எதிர்தரப்பு வில்லன்களுக்கு சுவாமி நாயுடுவை கொல்வதே வாழ்நாள் லட்சியம். ஆனால் எந்த சண்டை வந்தாலும் அவர்களை அடித்து துவைத்து வீசுவதே சுவாமியின் நண்பனும் பாதுகாவலனுமான சங்கரின் பணி. இதனால் இவனை அழிக்காமல் நாம் சுவாமியை நெருங்க முடியாது என தீர்மானிக்கிறார்கள். இதற்கான நேரமும் உருவாகிறது. யார் மூலம்... யெஸ் ஹீரோயின் என்ட்ரி.... தங்கை நந்தினி

சங்கரைப் பொறுத்தவரை அவனுக்கென வீடெல்லாம் கிடையாது. சுவாமியின் வீட்டில்தான் தங்கியிருப்பான். ஜீப் பானெட்டிலேயே தூங்குவான். சுவாமியின் தங்கை நந்தினி அவனைக் காதலிக்க இந்த தகுதிகள் போதாதா? படத்தில் நந்தினி இன்னொருவரை காதலிப்பதாக காட்சிகள் சுற்றி வளைத்து பிறகு காதல் பாடல்களுக்கு திரும்பி வரும். எப்போதும் உர்ரென முகம் வைத்திருக்கும் சுமந்தும் குத்துப் பாடல்களுக்கு ஏனோதானோ என வினோதமாக ஆடிக்கொண்டிருப்பார். 

படம் சீரியஸ் மோடுக்கு மாறியிருக்கும் சூழலில் நந்தினி சங்கரை என்னைக் காதலி என்னை மட்டும் காதலி என நச்சிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் சுவாமி நாயுடு (ஸ்ரீஹரி), நண்பனே துரோகம் செய்துவிட்டான் என பொங்கிக் கொண்டிருப்பார். நமக்கும் அதே போல்தான். நந்தினியைப் போட்டு தள்ளிவிட்டால் சுவாமி நாயுடுவேனும் நிம்மதியடைவார். அல்லது  அவரைப் பார்க்கும் நமக்கேனும் ரிலாக்ஸாக இருக்கும் என தோன்றுகிறது. இப்பகுதிகளை நீளமாக எடுத்தது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. 

படத்தில் நம்மை ஆர்வமான விஷயம், ஸ்ரீஹரிதான். பாசத்திற்கு உருகுவது, சங்கரை தனது ஆத்ம நண்பன் என நம்புவது, பிறகு பிறர் சொல்லக்கேட்டு அப்படி இருக்குமோ என கலங்குவது, நண்பன் இல்லாத சூழலில் குழப்பமாக கண்கலங்கியபடி மது அருந்தும் காட்சி, இறுதியில் நண்பனிடம் மன்னிப்பு கேட்டு இறப்பது என படத்தை தூக்கிப்பிடிப்பது இந்த ஒற்றை மனிதர் தான். 

அனுஷ்கா பாடல்களுக்கு...  கமலாகர் அதற்கென நிறைய பாடல்களை உருவாக்கியிருக்கிறார். ரோலிங்குல போம்மா என சொல்ல சுமந்த் காற்றிலேயே வந்து அவரைத் தாங்கிப் பிடிக்கிறார். 

படம் நெடுக நாட்டு வெடிகுண்டு, கத்தி, கடப்பாறை, துப்பாக்கி, எதிரே வந்தா மிதி, கை ஓங்கினா குமட்டுல குத்து என ஆக்சன் காட்சிகளும் அதற்கென கட்டிய ரோப்புகளும் எக்கச்சக்கம். அதிலும் ரயிலில் ஸ்ரீஹரி பெல்டியெல்லாம் போட்டு வில்லனை எத்துவார். அதற்கெல்லாம் இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சண்டை இயக்குநர் என்ன முடியுமோ அதற்கு மேல் மீட்டருக்கு மேலேயே முயன்றிருக்கிறார். பலனை காட்சிகளாக பார்த்தால் விரைவில் மோட்சம் கிடைக்கும்....

குத்துக்கும் எத்துக்கும் பத்துப்பேரு

கோமாளிமேடை டீம் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்