மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

 
ராபர்ட்டோ கோல்ட்டர்

நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம்உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது?

நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம். 

பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது?

நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும். 

காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா?

ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் அறிந்துகொண்டுதானே இருக்கிறோம். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக, மண் மெல்ல வளத்தை இழந்து வருகிறது. கூடுதலாக ஏற்படும் மண் அரிப்பு பாதிப்பை இன்னும் அதிகரிக்கிறது. உலகம் முழுக்கவே இப்பாதிப்பு உள்ளது. 

மனிதர்கள் நுண்ணுயிரிகளுடன்தான் வாழவேண்டும் என கூறுவது எதற்காக?

நமது உடலை தோல் பாதுகாக்கிறது. அதேநேரம் அது, நுண்ணுயிரிகளோடு ஓயாமல் தொடர்பு கொண்டு வருகிறது. நமது குடல் பகுதியில் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. அவை பாதிப்படையும்போது நமது ஆரோக்கியம் கெடுகிறது. நம்மைச் சுற்றிலும் சூழலில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. 

நுண்ணுயிரிகள்தான் நோய்களுக்கு காரணம் என பலரும் கூறுகிறார்களே அது உண்மையா?

அது தவறான கருத்து. கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இங்குள்ள சூழலில் உள்ளன. அவற்றில் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துபவை எண்ணிக்கையில் குறைவுதான். சிறுபான்மை என்று கூட கூறலாம். தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் சத்து அவசியம். இதை நேரடியாக வளிமண்டலத்திலிருந்து தாவரங்கள் பெற முடியாது. இதற்கு நுண்ணுயிரிகள் உதவுகின்றன. நாம் செயற்கை முறையில் உரங்களாக மாற்றியும் பயிர்களுக்கு இடுகிறோம். 

சமைக்கப்படும் உணவு, பதப்படுத்தி பெறும் பல்வேறு வகை உணவுகளுக்கும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. பிரட், சீஸ், யோகர்ட் போன்றவை இப்படித்தானே நமக்கு கிடைக்கிறது? 

டைம்ஸ் ஆப் இந்தியா

ஸ்ரீஜனா மித்ரா தாஸ்கருத்துகள்

பிரபலமான இடுகைகள்