கருத்தியலை விட எப்படியாவது வெற்றிபெறுவதுதான் இன்று முக்கியமாகிவிட்டது! - சத்ருகன் சின்கா, இந்தி நடிகர்

 
இன்று கருத்தியல் கடந்து வெற்றி முக்கியமானதாக மாறியுள்ளதா?

அரசியலில் இன்று கருத்தியல் எல்லாம் கிடையாது. இறுதியில் வெற்றி பெறுவதே முக்கியம் என மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அதிகாரம்தான் அனைவரும் அடைவதாக மாறியிருக்கிறது. 

கோவில்களுக்கு செல்ல டிக்கெட்டுகள் அவசியமா?

நான் இதை ஏற்கிறேன். கோவில்களுக்கு உள்ளே செல்ல எந்த வித சீட்டுகளும் தேவையில்லை. அவை எப்போதும் மக்களுக்காக திறந்து இருக்கவேண்டும். 

கிரிக்கெட் வீரர், நடிகர் தன்னை நிரூபிக்க சில திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிக்கான திறன், தகுதிகள் என்னென்ன?

தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று வெல்லவேண்டும். வெற்றிக்குப் பிறகும் நீங்கள் மக்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் இந்தி வட்டாரத்திலும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவர்களின் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியப் படங்களின் கதைகளோடுதான் அவர்களும் இணையாக பயணிக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல அவர்கள் அதிகளவு வசூல் பெற்றிருக்கலாம். நாம் அனைவரும் ஒரே நாட்டில் உள்ள தொழில்துறைகள் என்பதை மறந்துவிடக்கூடாது. 

இந்திய ஜனநாயகத்தை எப்படி வகைப்படுத்துவீர்கள்?

நம்முடைய நாட்டின் ஜனநாயகம், மிகப்பெரியது. சிறந்த மக்கள் அதனை பிரகாசிக்க வைக்கிறார்கள். இதில் எந்த சந்தேகமுமில்லை. 

உங்களை ஏமாற்றம் கொள்ள வைப்பது எது?

வாழ்க்கைக்கான மதிப்பு என்பது இன்று இல்லை. எல்லோரும் பணத்தின் பின்னேதான் செல்கிறார்கள். இதனால் பொறாமை, பேராசை, அதிகாரப்பற்று கூடிவிட்டது. 

சினிமா பிரபலங்கள் எப்போதும் வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறார்கள். அவர்கள் ஏன் இந்திய நாய்களை வளர்க்க கூடாது?

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையா? நாம் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைத்தானே அதிகம் பயன்படுத்துகிறோம். இந்தியப் பொருட்களை பயன்படுத்தலாமே? அதுவே கைகூடி வரவில்லை. இந்திய நாய்களை  த த்து எடுத்து வளர்ப்பதை நிறைய பிரபலங்கள் பிரசாரம் செய்துதான் வருகிறார்கள். 

சத்ருகன் சின்கா, நடிகர், அரசியல்வாதி

ஃபிலிம்ஃபேர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்