விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!
விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி!
2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை. மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.
கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின், கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.
"தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் , ஜெஸ்சி ஆர் பார்பர் ஆகியோர் எழுதிய சூழல் பாதுகாப்பு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மார்ச் மாதம் 2022 இல், ஐ.நாவின் சூழல் திட்ட அமைப்பு, அதிகரித்து வரும் இரைச்சல் விலங்குகளின் தகவல் தொடர்பை பாதிக்கிறது. கூடவே உயிரினங்களின் இயல்புகளையும் மாற்றி வருகிறது என இதன் தலைவர் இங்கர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
தகவல்
Forbes india july 2022
of noise and climate change
sumaira abdulali
கருத்துகள்
கருத்துரையிடுக