வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

 













வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது. 

சட்டவிரோத கடத்தல்

2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.  

கழுகுகளுக்கு விஷம்

2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப்பட்டு வருகிறது. போர்ச்சுக்கல் தேசிய குடியரசு காவல்படை, விஷ இறைச்சி வைக்கப்படுவதை தடுக்க 9 மோப்பநாய்களுக்கு பயிற்சியளித்து பயன்படுத்துகிறது. டாகஸ் தேசியப் பூங்காவில் பிகோ, சிகோ என இரு ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய்கள் பணியாற்றுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதியான, இங்கு ஐபீரியன் இம்பீரியல் கழுகு (Iberian imperial eagle) வாழ்கிறது. 

பெங்குவின்களுக்கு பாதுகாவலன்

ஆஸ்திரேலியாவில் உள்ளது மிடில் ஐலேண்ட். இங்கு சிறிய பெங்குவின் இனம் வாழ்ந்துவந்தது. தென்மேற்கு ஆஸ்திரேலியாவின் வர்னாம்பூல் நகரோடு மிடில் ஐலேண்டை இணைப்பது மணல் திட்டுதான். இந்த மணல்திட்டில்தான் பெங்குவின்கள் இனப்பெருக்கம் செய்து வந்தன். இதை அறிந்த நரிகள் அங்கு வந்து பெங்குவின்களை வேட்டையாடின. இதன் விளைவாக 2005ஆம் ஆண்டில், அங்கு மிஞ்சியவை 10 பெங்குவின்கள் தான்.  எனவே, ஆலன் மார்ஷ் என்ற விவசாயி மரீமா  இன (Mareema) நாயை பாதுகாப்பிற்கு கொண்டுவந்தார். இதன் விளைவாக 2020ஆம் ஆண்டில் பெங்குவின்களின் எண்ணிக்கை, 100 ஆக அதிகரித்துள்ளது.  


கன்சர்வேஷன் டாக்ஸ்

இசபெல்லா கிராக்

பிபிசி வைல்ட்லைஃப் ஸ்பிரிங் 2022

https://www.abc.net.au/news/2019-10-17/middle-island-penguin-protector-oddball-maremma-retires/11607662

https://www.abc.net.au/news/2017-02-15/oddball-the-penguin-protecting-pooch-and-dog-behind-movie-dies/8272784

https://www.theguardian.com/world/2017/feb/15/oddball-the-dog-who-saved-a-penguin-colony-and-inspired-a-film-dies-at-15

https://www.bbcearth.com/news/meet-the-dogs-saving-endangered-species

https://www.seattletimes.com/seattle-news/meet-benny-washingtons-newest-weapon-in-the-fight-against-illegal-wildlife-trafficking/

கருத்துகள்