இடுகைகள்

இந்தியா- சைக்கிள் பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபிபா பார்க்க ஜாலி சைக்கிள் டூர்!

படம்
சைக்கிளில் ரஷ்யா டூர் ! கேரளாவில் வசிக்கும் கிளிஃபின் பிரான்சிஸுக்கு ரஷ்ய உலக கோப்பையைக் காண ஆசை . தினசரி 40 டாலர்களை சம்பாதிப்பவர் எப்படி ரஷ்யா சென்று போட்டிகளைக் காண்பது ? அதற்கான வழி சைக்கிள் . விமானத்தில் துபாய் , இரான் சென்று அங்கிருந்து சைக்கிளில் 4200 கி . மீ .  ரஷ்யத்தலைநகரை சென்றடைவது பிளான் .   அர்ஜென்டினா வீரர் மெஸ்சியைக்காணவே இப்படியொரு தவம் . பாகிஸ்தான் வழியாக செல்ல நினைத்த பிரான்சிஸ் அரசில் பிரச்னைகளால் விமானத்தில் துபாயை அடைந்து அங்கு சைக்கிளை 700 டாலர்களுக்கு வாங்கியவர் தினசரி 10 டாலர்களை செலவழித்தார் . விடுதிகளில் தங்காமல் டென்டுகளில் தங்கி செல்லும் பாஸ்போர்ட்டுகளில் போலீசால் எட்டு மணிநேரம் நிறுத்திவைத்து சோதித்ததும் உண்டாம் . தஜகஸ்தானின் அருகிலுள்ள அசர்பைஜான் சென்றவர் , ஜார்ஜியாவில் ஆவணங்கள் இருந்தும் திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார் . சாலை வழியாக விரைவில் சைக்கிளில் மாஸ்கோவுக்கு சென்று பிரான்ஸ் மற்றும் டென்மார்க் மேட்சை பார்க்க திட்டமிட்டுள்ளார் .