இடுகைகள்

ரேடியோ அலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரேடியோ அலைகளைப் பற்றி அறிய புதிய நூல்!

படம்
விண்வெளியில் உள்ள விஷயங்களை கண்டறிய நம் வாழ்நாள் போதாது. காரணம் அத்தனை மர்மங்களை நம் தலைக்கு மேலுள்ள உலகம் கொண்டுள்ளது. இந்த நூல் ரேடியோ அலைகளின் மூலம் நாம் அறிந்துள்ள விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ரேடியோ அலைகளை எப்படி நாம் பெறுகிறோம், அதற்கான ஆன்டெனாக்கள், அதன் சிக்னல்கள் என நூல் விரிவாக ஏராளமான தகவல்களோடு எழுதப்பட்டுள்ளது. வானியல் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்.

பால்வெளியில் ரேடியோ அலைகளின் வீச்சு! - ஜாலியாக அறிவியல் கற்போம்!

படம்
இயற்பியல் பால்வெளியில் ரேடியோ அலைகள்! கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என நாளிதழில் அறிவியல் செய்திகள் படிக்கும்போது, பலருக்கும் சந்தேகம் வரும்; அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் வானியலாளர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றனர். பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக, வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன. ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன? பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான் அணுக்கள், ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது. ரேடியோ அலைகள் அரித

5ஜி அலைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 5 ஜி அலைவரிசை ரேடியோ அலைகள் பாதுகாப்பானதா? ஐந்தாம் தலைமுறை ரேடியோ அலைகள், அதிக வலிமையான அலைகளைப் பயன்படுத்துவதால் பிற உயிரினங்களை பாதிக்கும் என்று பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதற்குள் 5 ஜி வந்துவிட்டது. முந்தைய 4ஜியை விட 5ஜி 20 மடங்கு அதிகவேகமாக தகவல்களை கடத்தும் திறன் கொண்டது. வேகம் என்றால் இன்னொன்றையும் மறக்காதீர்கள். அந்த வேகத்தில் பாதியளவு காசையும் கொட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். இதில் சீன நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் காசு குறைய வாய்ப்புள்ளது. ரேடியோ அலைகள், மின்காந்த அலைகளின் ஒரு வகை. இதன் கூடவே புற ஊதாக்கதிர்கள், எக்ஸ்ரே, காமாக் கதிர்கள் என பல்வேறு கதிர்கள் நம் உடல்நலனை பாதிக்கக் கூடியவை. ரேடியோ அலைகளுக்கு பொதுவாக உடலை பாதிக்கும் ஆற்றல் குறைவு. 5 ஜி அலைகள் 80 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் செயல்படவிருக்கின்றன. பிபிசி

ரேடியோ அலைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம்!

படம்
pinterest ரேடியோ அலைகள் - விளக்கம் ரேடியோ அலைகள் மின்காந்த அலை வகையைச் சேர்ந்தவை. பெரும்பாலும் தகவல் தொடர்புக்காகவே பயன்படுகின்றன. இன்றும் நாம் பயன்படுத்தும் டிவி சேனல்கள், போன்கள், ரேடியோ ஆகியவை இந்த ரேடியோ அலைகளின் மூலமே செயல்படுகின்றன. ரேடியோ அலைகளைப் பெறும் ரேடியோ அதனை ஒலி அலையாக மாற்ற ஏ.ஆரின் இனிய கீதத்தை நாம் கேட்கிறோம். மின்காந்த அலைக்கற்றையை ஏழு பகுதிகளாக பிரிக்கலாம். குற்றலைகள், அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதா கதிர்கள், ஒளி அலைகள், எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் ஆகியவை இதில் அடங்கும். ரேடியோ அலைகள் மிக நீளமான அலைநீளம் கொண்டவை. ஒரு மில்லிமீட்டரிலிருந்து 64 மைல்களுக்கு பயணிக்கும். அதாவது நூறு கி.மீ தொலைவுக்கு. 3 கிலோ ஹெர்ட்ஸிலிருந்து 300 பில்லியன் ஹெர்டஸ் வரை அல்லது 300 ஜிகாஹெர்ட்ஸ் வரை. BandFrequency range Wavelength  range Extremely Low Frequency (ELF)<3 kHz>100 km Very Low Frequency (VLF)3 to 30 kHz10 to 100 km Low Frequency (LF)30 to 300 kHz1 m to 10 km Medium Frequency (MF)300 kHz to 3 MHz100 m to 1 km High Frequency (HF)3 to 30 MHz10 to