இடுகைகள்

வகுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?

படம்
 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது.  கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர்.  தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...

எந்திரம் போன்ற மனிதர்களை உருவாக்கும் அரசும், மத நிறுவனங்களும்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  2 சரியான கல்வி ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் உள்ள கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் மனதில் ஏராளமான குறிக்கோள்களைக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்களின் மனதிலுள்ள முன்மாதிரிகளை  குறிக்கோள்களை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவது அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுமா? நிச்சயமாக இல்லை. இது அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயல்பாடாகும். நீங்கள் நேசிக்கும் குழந்தைகளை அன்பும் அக்கறையும் இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்கிறீர்கள். அப்படி குழந்தைகள் ஒப்படைக்கப்படும் இடம்தான், பள்ளி. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மனதில் பயம், பதற்றம், குழப்பம் உண்டாகிறது. அவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கூட தேவையான அன்பு கிடைப்பதில்லை. இந்த முறையில்தான் மாணவர்கள் மந்தமாக, உணர்ச்சிகள் இல்லாத வணிகம் செய்பவர்களாக உருவாக்குகிறார்கள். இன்றைய பெற்றோர் லட்சியத்தில் உறுதியாக இருந்து தங்களது தேவைக்கு ஏற்ப குழந்தைகளைப் படிக்க வைத்து பட்டம் பெற வைக்கிறார்கள். குறிக்கோள்கள், முன்மாதிரிகள் என வடிவமைத்துக்கொள்ளாமல் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது முக்கியம். அப்படி குறிப்பிட்ட முறைகள் நுட்பத்திற்குள் ச...

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி...

கல்வித்துறையில் வகுப்பறை, ஆன்லைன் என ஹைபிரிட் முறையே வழக்கத்திற்கு வரும்! சுமித் மேத்தா, லீட் நிறுவனம்

படம்
        சுமித் மேத்தா       சுமித் மேத்தா லீட் ஸ்கூல் இயக்குநர் கல்வித்துறை தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்ன ? அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கல்வி வழங்கப்படும் பள்ளி வகுப்புறைகளை மாற்ற முடியாது . ஆனால் கல்வியை வழங்குவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆசிரியர்களின் திறனை கூட்டும் . ஆசிரியர்களின் பங்கு உயர்கல்வியில் அதிகம் உள்ளது . ஆனால் இதில் தொழில்நுட்பத்தின் பங்கு கூடும் . கல்வி என்பது தனிப்பட்ட அளவில் அதிகம் கவனம் செலுத்துவதாக மாறும் . மொழி , பாடங்கள் , தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்தவையாக இருக்கும் . புதிய கல்வியாண்டு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் ? ஏப்ரல் மாதம் முதல் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்படவிருக்கின்றன . மேற்கு மற்றும் தெற்குப்பகுதியில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன . பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட இனிமேல் ஹைபிரிட் முறையில் பள்ளி , வீட்டில் இணையம் வழியில் கற்றல் என்றே கல்விமுறை தொடர வாய்ப்புள்ளது .    சுமித் மேத்தா தேசியக்கல்விக் கொள்கைப்படி கல்வி முறை எப்படியிருக்கும் என நினைக்கிறீர்...