கல்வித்துறையில் வகுப்பறை, ஆன்லைன் என ஹைபிரிட் முறையே வழக்கத்திற்கு வரும்! சுமித் மேத்தா, லீட் நிறுவனம்

 

 

 

 

Views by Sumeet Mehta, Cofounder & CEO, LEAD School - The ...
சுமித் மேத்தா

 

 

 

சுமித் மேத்தா

லீட் ஸ்கூல் இயக்குநர்


கல்வித்துறை தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்ன?


அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கல்வி வழங்கப்படும் பள்ளி வகுப்புறைகளை மாற்ற முடியாது. ஆனால் கல்வியை வழங்குவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆசிரியர்களின் திறனை கூட்டும். ஆசிரியர்களின் பங்கு உயர்கல்வியில் அதிகம் உள்ளது. ஆனால் இதில் தொழில்நுட்பத்தின் பங்கு கூடும். கல்வி என்பது தனிப்பட்ட அளவில் அதிகம் கவனம் செலுத்துவதாக மாறும். மொழி, பாடங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்தவையாக இருக்கும்.


புதிய கல்வியாண்டு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள்?


ஏப்ரல் மாதம் முதல் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்படவிருக்கின்றன. மேற்கு மற்றும் தெற்குப்பகுதியில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட இனிமேல் ஹைபிரிட் முறையில் பள்ளி, வீட்டில் இணையம் வழியில் கற்றல் என்றே கல்விமுறை தொடர வாய்ப்புள்ளது

 

ज़िन्दा जियो - Live Alive - Elevar Equity
சுமித் மேத்தா

தேசியக்கல்விக் கொள்கைப்படி கல்வி முறை எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள்?


பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு என்று கூறிவிடமுடியாது. இப்போது பலரும் பிழைத்திருப்பதற்கான தாக்குபிடிப்பதற்கான விஷயங்களை செய்தாலும் அதைத்தாண்டிய இலக்கை நோக்கி தலைமைத்துவ திறனோடு முயல வேண்டும்.


பள்ளிகள் திறக்கப்படும் முன்னர் பள்ளி நிர்வாகம் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?


மக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு செய்திருக்கும் ஏற்பாடுகளை வெளிப்படையாக்க வேண்டும். பெற்றோர்தான் இதில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதா, வீட்டிலேயே கற்க வைப்பதாக என முடிவெடுக்கவேண்டும். அவர்களுக்கு இப்போது இருவாய்ப்புகள் உள்ளன

 

சுமித் மேத்தா

பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதப்படுவது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றனவே?


பத்தாம் வகுப்பு தேர்வுகள், முடிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முக்கியமானவை என்று தேர்வு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தேர்வு நடக்கும் காலத்தில் மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் கவனமாக கண்காணித்து வரவேண்டும்.


பயனீர்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்