நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

 

 


 

 

 

குறிக்கோள்களை பின்பற்றுதல்!


மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன். இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன். இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது. இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம். நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான். நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம். பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன். நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம்.


நான் கூறியுள்ள தீர்மானம், மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும், மறுப்புகளும் எழுந்துள்ளன. இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம். இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம். ஒருவரின் கருத்தை ஏற்கலாம் அல்லது கண்டனம் தெரிவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. மாநிலங்களிலுள்ள ராஜாக்கள் தவிர ஏராளமான மன்னர்களை வரலாற்றில் படித்திருப்போம். இவர்களின் கூற்றுகளை மக்களவை ஏற்றுக்கொள்வதில் எந்த அவசரமும் கிடையாது. இந்தியாவுக்கு தொடர்புடையவர்கள் அல்லது தொடர்பில்லாதவர்கள் கூட இந்த விவகாரத்தில் கருத்துகளை கூறலாம். அதனை நாம் அவசியம் மிகுந்த ஒன்றாக எடுத்துக்கொள்ள அவசியம் கிடையாது. இந்தியாவைப் பொறுத்தவரை அதன் செயல்பாட்டில் நாம் எந்த சமரசமும் செய்துகொள்ள கூடாது.


நாம் இதுகுறித்து முன்னரே கூறியது போல மாநிலங்களின் உள்நாட்டு விவகாரங்களில் மத்திய அரசு எப்போதும் தலையிடாது. மக்கள் விரும்பினால் ஒழிய நாம் ஒரு மாநிலத்தின் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாது. பிரிட்டிஷ் காமன்வெல்த நாடான ஐரிஷ் குடியரசு நாட்டை இதற்கு உதாரணமாக காட்டலாம். அரசியலமைப்புப்படி நாம் மாநிலங்களில் விவகாரங்களில் தலையிடப்போவதில்லை. அது அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் விருப்பம்தான். அதேசமயம் சில மாநிலங்கள் சுதந்திரமாகவும் பிற மாநிலங்கள் யாரோ ஒருவருக்கு அடிமையாகவும் இருப்பது சரியானது அல்ல. அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைப்போடு இருக்கவேண்டும். இந்த சூழ்நிலை எதிர்காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். உலக நாடுகள் கூட இப்படி இருக்கின்றன. எங்கேயும் அமைதி நிலவவில்லை.


சுதந்திரம் பெற்ற, பெறாத மாநிலங்களை கட்டுப்படுத்த தனி அமைப்புகளை அரசு உருவாக்கி மாநிலங்களை கண்காணிக்கப்போவதில்லை. ஆனால்,சிறிய மாநிலங்கள் ஒன்றாக இணைந்து தன்னாட்சியுடன் இயங்கி, மத்திய அரசுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் போதுமானது. இதற்கு அவர்கள் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யவேண்டும். இந்திய மாநிலங்கள் சுயாட்சி பகுதிகளாக இயங்குவதும், அரசியலமைப்பை ஏற்பதும் நான் வரவேற்கும் விஷயங்கள். இதில் நான் கூறுவதை விட மக்களவை எடுக்கும் முடிவுகளை முக்கியமானவை. இவை மக்களவையால் விரும்பப்படாதபோது, அது தொடர்பான விவகாரங்களிலும் எதிரொலிக்கும்.


மாநிலங்களின் ஆட்சியாளர் எங்களது தீர்மானத்தை எதிர்த்தாலும் மக்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. கொள்கைரீதியாக அவர்கள் முடிவு எடுத்தாலும் நடைமுறைரீதியான மக்கள் எடுக்கும் முடிவே செல்லுபடியாகும். இதனை யாரும் ஆட்சேபிக்க முடியாது. இந்திய சுதந்திர குடியரசு என்ற முடிவையும் கூட இறையாண்மை மிக்கதாக அரசியலமைப்பில் இணைத்துள்ளோம். இறையாண்மை மிக்க நாடாக இந்தியாவில் வேறு என்ன விஷயங்களை இணைக்க முடியும்? என்னென்ன விஷயங்களை சாத்தியப்படுத்தமுடியாதோ அத்தனையும் இந்தியக்குடியரசில் நாம் விவாதிக்க முடியும்.


நாம் இங்கிலாந்து மற்றும் பிற காமன்வெல்த் நாடுகளோடு எவ்விதமான உறவைக் ஏற்படுத்திக்கொள்ள போகிறோம் என்பது முக்கியமானது. இங்கிலாந்து நாட்டோடு நமக்குள்ள உறவு என்பது அந்நாட்டின் காலனி நாடாக இந்தியா முன்னர் இருந்தையொட்டி உருவானது. ஆனால் இதனை முக்கியமான காரணமாக வைத்து அந்நாட்டுடன் உறவை கைவிடுவது உலகளவில் இந்தியாவை தனிமைப்படுத்தும். எனவே நாம் அச்செயலை செய்யப்போவதில்லை. எனவே நாம் இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளோடு நட்புறவையே பேண நினைக்கிறோம்.


மக்களவை இதுபற்றி கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் இங்கு வார்த்தைகளின் பொருட்கள் பின்னாளில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல இந்த உலகில் தனிமைப்படுத்துதல் என்பது சாத்தியமே இல்லை. நீங்கள் பிறரிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வது கடினம். பிற நாடுகளுடன் போரிடவேண்டும் அல்லது ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இதைத்தவிர வேறு நடுநிலைமை இல்லை. நாம் அமைத்திக்குத்தான் பாடுபடவேண்டும். இந்தியா பிற நாடுகளுக்கு உதவ முடியுமென்றால் எந்த நாட்டுடனும் போர் செய்ய விரும்பவில்லை. நாம் இதனை ஒரே உலகம் என்று கூட அழைக்கலாம். இப்படி ஒரு அமைப்பாகவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாகியுள்ளது. இதில் நிறைய சிக்கல்களும் உள்ளன. உலகம் எனும் அமைப்பின் தொடக்கம்தான் இது. இந்தியா இந்தவகையில் கூட்டுறவை அளிக்கும் உறுதி கூற முடியும்.


இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தி பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்தால் இந்த அமைப்பிற்கு என்ன பெயர் வைப்பது? பலமான நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்தால் பலவீனமாக உள்ள நாடும் கூட பலமான நாடாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த அமைப்பில் நாடுகள் இணைந்தால் அவை தனிமைப்படும் வாய்ப்பு இல்லை. நமக்கு எதிர்காலம் அமைதி அல்லது போர் என எப்படி அமைகிறதோ தெரியவில்லை. பல்வேறு சக்திகள் நம்மை இந்த இரு முடிவுகளுக்கும் தள்ளும் வாய்ப்பு உள்ளது. நாம் இறைதூதராக நாளை என்ன நடக்கும் என்று கூறமுடியாது. இந்தியா பிற நாடுகளோடு ஒற்றுமையோடு நடந்துகொள்ளும் அதே நிலையில் சுதந்திரமான வெளியுறவு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்தும்.


ஒருவர் மற்றவரை சந்தேகமாக பார்க்கும் நிலையில் இந்தியா நியூட்ரலான நிலையில் பிற நாடுகளின் மீதான கருணையோடு வருவது பலரும் எதிர்பார்க்காதது. அமெரிக்க நாட்டினர் எங்களை விமர்சிக்கலாம். ஆனால் நாங்கள் எங்களுக்கென தனி கொள்கையை கொண்டிருக்கிறோம். குழுவாக இயங்கி வரும் நாடுகள் நாங்கள் பிற நாடுகளுடன் இணைந்துள்ளதாக நினைப்பார்கள். இந்தியா என்பது சுதந்திரமான குடியரசு நாடாக செயல்படுகிறது என்றால் அதன் அர்த்தம், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவில்லை என்பதல்ல. இந்தியா பிற நாடுகளுடன் அமைதி மற்றும் சுதந்திரத்திற்காக பாடுபடும். இதற்காக இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து செயல்படும். இதைப்போலவே சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றும். பிறநாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதில் பலவந்தம் இல்லாவரை கூட்டுறவு தொடர்வதில் பிரச்னையிருக்காது.


நல்லெண்ணத்தோடு, நோக்கத்தோடும் இந்தியாவை அணுகுபவர்களோடு பணியாற்றுவதற்கு இந்தியா தயாராகவே உள்ளது. நட்புறவு என்ற பெயரில் உள்நோக்கதோடு அணுகுபவர்களுக்கு இந்தியாவில் எந்த சலுகைகளும் கிடைக்காது. இப்படிப்பட்ட உபசரிப்புகளால் பட்ட காயங்களை இந்திய மறக்கவேயில்லை. நாம் முன்னுதாரண தலைமையின் கீழ் போராடி சுதந்திரம் பெற்றதால் முடிந்தவரை பிறருடன் நட்பு பாராட்டவேண்டும். அவர்கள் நம்மை எதிர்க்கும் சூழலிலும் இதனைச் செய்யவேண்டும். இதனை நாம் எவ்வளவுதூரம் பின்பற்ற முடியும் என்பது தெரியவில்லை. காரணம், நாம் பலவீனமான மனிதர்கள் என்பதுதான். நாம் கூறிய செய்தி பல கோடி இந்தியர்களின் மனதில் பதிந்துவிட்டது. நாம் இந்த செயல்பாட்டில் தவறு செய்யும்போது, நாம் மக்களால் சாம்பலாக்கப்படுவோம் என்பதை மறந்துவிடக்கூடாது.


நாம் இன்று தீர்மானிக்கும் உரையானது அரசியலமைப்புச்சட்டம் அதன் போக்கில் செயல்படுவதற்கான சுதந்திரத்தை அளிக்கும். அதுவே ஏழைப்பட்ட நமது மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடத்தையும் அளிக்கும். நமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து பயன்படுத்துவது நமக்கு மட்டுமல்லாது பிற ஆசிய நாடுகளுக்கும் உதவும். நாம் சிந்திப்பதையும் செயல்படுத்துவதையும் பெரிதாக செய்யவேண்டும். சிறு விவகாரங்கள், சிக்கல்கள் நம்மை பிரிப்பதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. பல கோடி மக்களை வழிநடத்தும் பொறுப்பு நமது தோளில் சுமத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மதம், இனம், சாதி, மொழி சார்ந்த குழு வளர்ச்சி பெறுவது என்பது இந்தியா வளர்ச்சி பெற்றதாக கருதப்படாது. ஆனால் இந்தியா படிநிலையில் கீழே சென்றால் நாம் அனைவரும் கீழே சென்றதாகவே அர்த்தம். இந்தியா சுதந்திரமான நாடாக உருவானால் அங்கு வாழ்கின்ற நாம் அனைவருமே அதன் பயன்களைப் பெறுவோம்.


நாம் உருவாக்கவிருக்கிற அரசியலமைப்புச்சட்டடம், மக்களவை ஏற்றுக்கொள்ளும் விதமாக சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இதில் மாறுபட்ட கருத்துகளும் கூட இருக்க வாய்ப்புண்டுதானே? இதன் மூலம் என்ன செய்யமுடியும், செய்யமுடியாது என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. புதிய இந்தியா ஆற்றல் மிக்க சமூகத்தை பார்க்கவிருக்கிறது. சிலர்இந்தியாவில் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு நாம் எதையும் செய்யமுடியாது என்று நினைக்கிறார்கள். இன்று நம்மால் மாற்றங்களை செய்யமுடியாமலிருக்கலாம். இன்று செய்யமுடியாத மாற்றங்களைக்கூட நாளைக்கும் செய்யமுடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. அரசியலமைப்புச்சட்டம் சுதந்திரமடைந்த இந்தியாவின் தனித்தன்மையை மறுக்கலாம். ஆனால் அடுத்து வரும் தலைமுறை மக்களின் விருப்பங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றி வைக்கும் திறனை அரசியலமைப்புச்சட்டம் கொண்டிருக்கும். நாம் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை பேசுவதில் பொருளில்லை. காரணம், அதிலுள்ள நுட்பமான தகவல்களை நாம் பேசினாலும் அவை நடக்கும் என உறுதியாக கூறமுடியாது. எதிர்காலத்தில் வரும் மக்கள் அதனை செய்வார்கள். கூட்டுறவு முறையில் நாம் செய்யும் செயல்பாடுகள் நிலைத்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கு எதிரான தடைகள் காலப்போக்கில் தானாகவே காணாமல் போகும். இப்போது எனது உரையில் கடைசி பாராவை படித்துவிடுகிறேன்.


இந்தியா ஓர் சிறந்த நாடு. தன்னுள் பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டிருக்கிறது. சிறந்த மனித வளத்தை உள்ளடக்கியுள்ளது. இன்று உலகில் அணுகுண்டு, மனிதநேயம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டிலும் இந்தியா முக்கியமான பங்களிப்பை வகிக்கும் என கருதுகிறேன். சரியான நேரம் வரும்போது தொன்மை நாடான இந்தியா உலக நாடுகளில் முக்கியமான இடத்தைப் பெறும். உலகில் அமைதி மற்றும் மனிதநேயத்திற்காக பாடுபடும் என்பதும் உறுதி.



vincent kabo


கருத்துகள்