உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! - மின்சாரம், டின் உணவுகள், வயர்லெஸ் தகவல்தொடர்பு, பிளாஸ்டிக்
மகத்தான கண்டுபிடிப்புகள்
மின்சாரம்
1752
இதனை கண்டுபிடிப்பு என்று கூறமுடியாது. மின்னல், இடியைப் பார்த்து அதிலிருந்து மின்சாரம் வருவது பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள். எனவே இதனை கண்டறிந்தனர் என்று கூறலாம். கி.மு 600 ஆண்டிலே இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது வந்த து. ஆனாலும் கூட பெஞ்சமின் பிராங்களின் கண்டுபிடிக்கும் வரை வெளியில் சொல்லும் முன்னேற்றங்கள் மின்சாரத்தில் ஏற்படவில்லை. இதனைப் பயன்படுத்தி மைக்கேல் பாரடே எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்தார். மின் அமைப்புகளை முதலிலேயே சிறப்பாக அமைத்துவிட்டதால் தாமஸ் ஆல்வா எடிசன் க ண்டுபிடித்த பல்பு எளிதாக விற்பனையானது இதன் அர்த்தம்,, முதலில் வணிக மார்க்கெட்டை கண்டுபிடித்தபிறகு பொருளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதனால்தான் கண்டுபிடிப்புகளை விட மார்க்கெட்டிங்கிற்கு கவனம் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் ஜிஇ எனும் நிறுவனத்தை உருவாக்க முடிந்தது.
டின் உணவுகள்
வெளிநாடுகளில் டின் உணவு இல்லையென்றால் மக்கள் வாழ்வதே கடினம். காரணம் அங்கு நிலவும் குளிருக்கு உணவை சமைத்து சாப்பிடுவது கடினம். எனவே பெரும்பாலான உணவுகளை சூப்பர் மார்க்கெட்டில் டின்களாகவே வாங்கி சாப்பிடுகிறார்கள். இதில் பிரசர்வேட்டிவ் பாதகங்கள் உண்டு என்றாலும் உடனே வாங்கி சாப்பிட முடிவதால் தேசம் தாண்டியும் டின் உணவுகள் புகழ்பெற்று வருகின்றன. 19ஆம் நூற்றாண்டில் டின் உணவுகள் பதப்படுத்துவது முன்னேற்றமாகி வணிகரீதியான நிறுவனங்கள் இதில் சாதித்தன.
புகைப்படம்
1826
பல நூற்றாண்டுகளாக ஒருவரை பதிவு செய்வது என்பது ஓவியம் வரைந்தால்தான் சாத்தியம் என்ற நிலை இருந்தது. இதனால் மனிதர், இடம் என எதனையும் வரைவது அதிக செலவு பிடிக்க கூடியதாக இருந்தது. 1826ஆம்ஆண்டு இதனை மாற்றிய பெருந்தகை ஜோசப் நிசப்போர் நிப்சே. பிரெஞ்சு நாட்டைச் சேர்்ந்த இவர்தான் புகைப்படம் என்ற கான்செப்டை வெற்றிகரமாக நிலைநிறுத்தினார். பல்வேறு சோதனைகள் வழியாக புகைப்படம் பதிவாகும் பொருளை மாற்றி புகைப்படம் என்பதை பிரபலமாக்கினார்.
காப்புரிமை
முதலில் காப்புரிமை என்பது கிரேக்க நகரமான சைபரி எனுமிடத்தில் உருவானது. இதன் காலம் கி.பி. 500 இன்றுவரை பொருட்களை காப்பியடித்துவிட்டார்கள் என்று சொல்லி ஆப்பிளும் சாம்சங் வரையிலான நிறுவனங்கள் கூட சண்டை போட்டுகொண்டிருக்கின்றன. முன்பும் இதேபோல்தான் பொருட்களை யார் திருட்டுக்கொடுக்காமல் பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு அப்பொருளின் மூலம் வரும் வருமானம் கிடைத்து வந்தது. இன்றும் நீங்கள் கண்டுபிடித்த ஒரு பொருளை புதியது என்று சொல்லி ஏதொன்றின் நகல் இல்லை என்று பதிவு செய்யலாம். பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.
பிளாஸ்டிக்
1856
பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பார்கெஸ் செல்லுலோஸ், நைட்ரிக் ஆக்சைட்டுடன் கலந்து முதல் பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார். இதனை வணிக ரீதியில் பார்க்கேசைன் என்று பெயரிட்டார். இதற்காக இவருக்கு தொழில்துறை விருது 1862இல் விருது லண்டனில் கிடைத்தது. ஆனால் பிளாஸ்டிக்கை பெரியளவில் தயாரிக்க முயன்றபோது தோல்விதான் கிடைத்தது. காரணம், இரண்டு வேதிப்பொருட்களின் சேர்மானம் விலை அதிகரித்துவிட்டது. இதனால் 1868இல் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து பார்கெசைன் பிளாஸ்டிக் காணாமல் போனது.
வயர்லெஸ் தகவல்தொடர்பு
1891
டிவி, ரேடியோ, ரேடார், செயற்கைக்கோள் ஆகியவை இயங்க வயர்லெஸ் தகவல்தொடர்புதான் முக்கியமான காரணம். 1891ஆம்ஆண்டு நிக்கோலா டெஸ்லா இதனை கண்டுபிடித்துவிட்டார். நிகோலா வர்த்தகரீதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் இன்றுவரை அவரளவுக்கு புதிய பொருட்களை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர் எவருமில்லை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரேடியோ
சர் ஆலிவர் லாட்ஜ் 1894ஆம் ஆண்டு ரேடியோவுக்கான முதல் சிக்னலை அனுப்பினார். மார்கோனிக்கு முன்பாகவே இதனை செய்தார் இவர். மார்கோனி பின்னர் வயர்களில்லாத டெலிகிராப்பிற்கான காப்புரிமையைப் பெற்றார்.
டிவி
ஜான் லோகி பெயர்ட் என்ற ஸ்காட்லாந்து கண்டுபிடிப்பாளர் டிவியில் படம் நகர்வை முதலில் கண்டுபிடித்தார்.
மொபைல்போன்
ஹலோ மோட்டோ என்று ரிங்டோனில் அசத்தும் மோடரோலாவின் ஊழியர்கள்தான் இதனை கண்டுபிடித்தனர். அப்போது மொபைல்போனின் எடை ஒரு கிலோகிராம் இருந்தது. வெயிட் ஜாஸ்தி என்றாலும் அன்றைய காலகட்டத்தில் முக்கியமான கண்டுபிடிப்பு.
வைஃபை
1997 வரையிலும் கூட முழுமையான விதிமுறைகளோடு வைஃபை இயங்கவில்லை. பல்வேறு கல்வி வட்டாரங்களில் பயன்பட்டது. பின்னாளில்தான் பிரபலமாகி வெகுஜன மக்களின் கைகளில் இணையம் கிடைத்தது.
ஸ்கைகிராப்பர்
இன்று விண்ணுயர்ந்த கட்டிடங்கள் பெரிய கட்டிட சாதனை கிடையாது. ஆனால் முதலில் கட்டிடக்கலைஞர் வில்லியம் லேபரோன் ஜென்னி கட்டிய பத்து மாடி காப்பீட்டு நிறுவனக் கட்டிடம் பெரிய சாதனைதான். கட்டியது 1885இல். இருப்பை வளைத்து கிரியேட்டிவியை ஊருக்கே சொல்லும் வகையில் பிரமாண்ட கட்டுமானங்களாக கட்டுவது இதற்குப் பின்னரே பரவலானது.
குளிர்சாதனப்பெட்டி
1922
அதனை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ராயல் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இருவர்தான் கண்டுபிடித்தனர். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மின்சாரத்தில் இயங்கும் நிலையில் இல்லை. வாயுக்கள் மூலம் இயங்கும் தன்மை கொண்ட குளிர்சாதனப்பெட்டி இது. இதனை முதலில் சந்தைக்கு கொண்டு வந்தபோது யாரும் வாங்கவில்லை. பின்னர் மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதனப்பெட்டிகள் வந்தபிறகு உலகமே வாங்கியது. உணவைக் கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ளும் அத்தியாவசிய பொருளாக இன்றும் விற்பனையில் உச்சத்தில் உள்ள சாதனம் இது.
கருத்துகள்
கருத்துரையிடுக